-
2 ராஜாக்கள் 24:14, 15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 எருசலேமில் இருந்த உயர் அதிகாரிகள்,+ மாவீரர்கள், கைத்தொழிலாளிகள், கொல்லர்கள்*+ என எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனான்; மொத்தம் 10,000 பேரைக் கொண்டுபோனான். பரம ஏழைகளைத் தவிர வேறு யாரையுமே நகரத்தில் விட்டுவைக்கவில்லை.+ 15 இப்படி, யோயாக்கீனையும்+ அவருடைய அம்மாவையும் மனைவிகளையும் அரண்மனை அதிகாரிகளையும் பிரபலமான ஆண்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+
-
-
எரேமியா 24:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘யூதாவிலிருந்து கல்தேயர்களின் தேசத்துக்குப் பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்கள் இந்த நல்ல அத்திப் பழங்களைப் போல இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நல்லது செய்வேன்.
-