9 யெகோவா சொல்வது இதுதான்:
‘தீரு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.
சிறைபிடித்த எல்லா ஜனங்களையும் அது ஏதோமிடம் ஒப்படைத்தது.
சகோதரர்களோடு செய்த ஒப்பந்தத்தை மறந்துவிட்டது.+
10 அதனால், தீருவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.
அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.’+