-
எபிரெயர் 9:11, 12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 ஆனாலும், நிறைய நன்மைகளைச் செய்திருக்கிற தலைமைக் குருவான கிறிஸ்து, கையால் செய்யப்பட்ட பூமிக்குரிய கூடாரத்துக்குள் போகவில்லை; அதைவிட பரிபூரணமான பெரிய கூடாரத்துக்குள் போயிருக்கிறார். 12 வெள்ளாடுகள், இளம் காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு போகவில்லை. அதற்குப் பதிலாக, தன்னுடைய சொந்த இரத்தத்தை+ எடுத்துக்கொண்டு எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக மகா பரிசுத்த அறைக்குள் போய், நமக்காக நிரந்தர விடுதலை* வாங்கித் தந்திருக்கிறார்.+
-
-
எபிரெயர் 10:8-10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 முதலில், திருச்சட்டத்தின்படி கொடுக்கப்படுகிற பலிகளைப் பற்றி, “பலிகளையும் காணிக்கைகளையும் தகன பலிகளையும் பாவப் பரிகார பலிகளையும் நீங்கள் விரும்பவில்லை, அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று சொன்னாலும், 9 பின்பு, “இதோ! உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்ற வந்துவிட்டேன்” என்று சொன்னார்.+ அதனால், இரண்டாவதை நிலைநாட்டுவதற்காக முதலாவதை அவர் நீக்கிப்போடுகிறார். 10 இயேசு கிறிஸ்து தன்னுடைய உடலை எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுத்து அந்த “விருப்பத்தை”+ நிறைவேற்றியதால்தான் நாம் புனிதமாக்கப்பட்டிருக்கிறோம்.+
-