-
ஏசாயா 65:21, 22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள்.+
திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள்.+
22 ஒருவர் கட்டும் வீட்டில் இன்னொருவர் குடியிருக்க மாட்டார்.
ஒருவருடைய தோட்டத்தின் விளைச்சலை இன்னொருவர் சாப்பிட மாட்டார்.
ஏனென்றால், மரத்தின் ஆயுள் காலத்தைப் போல என் ஜனங்களின் ஆயுள் காலமும் இருக்கும்.+
நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள்.
-
-
எசேக்கியேல் 28:25, 26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “மற்ற தேசங்களுக்குச் சிதறிப்போன இஸ்ரவேலர்களை நான் மறுபடியும் ஒன்றுசேர்க்கும்போது,+ நான் பரிசுத்தமான கடவுள் என்று எல்லா ஜனங்களும் புரிந்துகொள்வார்கள்.+ என்னுடைய ஊழியனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தேசத்தில்+ என் ஜனங்கள் குடியிருப்பார்கள்.+ 26 அவர்களைக் கேவலமாக நடத்துகிற சுற்றுவட்டார ஜனங்கள் எல்லாரையும் நான் தண்டித்த பின்பு,+ அவர்கள் அங்கே பாதுகாப்பாக வாழ்வார்கள்.+ வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைத்து,+ பயமில்லாமல் வாழ்வார்கள். அப்போது, நான் அவர்களுடைய கடவுளான யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள்”’” என்றார்.
-