-
மாற்கு 4:26-30பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 அதோடு அவர்களிடம், “கடவுளுடைய அரசாங்கம், தன் நிலத்தில் விதையைத் தூவுகிற ஒருவனைப் போல் இருக்கிறது. 27 அவன் ஒவ்வொரு ராத்திரியும் தூங்கிவிட்டுக் காலையில் வந்து பார்க்கும்போது, அவனுக்கே தெரியாமல் அந்த விதை முளைத்துப் பெரிதாக வளருகிறது. 28 அந்த நிலம் தானாகவே படிப்படியாகப் பலன் தருகிறது; முதலில் தண்டையும், பின்பு இளங்கதிரையும், கடைசியில் முற்றிய கதிரையும் தருகிறது. 29 பயிர் விளைந்து அறுவடைக் காலம் வந்தவுடன், அவன் அதை அரிவாளால் அறுக்கிறான்” என்று சொன்னார்.
30 அதோடு, “கடவுளுடைய அரசாங்கம் எதைப் போல் இருக்கிறது, எந்த உவமையின் மூலம் அதை விளக்கலாம்?
-