-
லூக்கா 18:10-14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 “ஜெபம் செய்வதற்காக இரண்டு பேர் ஆலயத்துக்குப் போனார்கள். ஒருவன் பரிசேயன், இன்னொருவன் வரி வசூலிப்பவன். 11 அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு, ‘கடவுளே, கொள்ளையடிப்பவர்களையும் அநீதியாக நடக்கிறவர்களையும் மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் போல நான் இல்லை, வரி வசூலிக்கிற இவனைப் போலவும் நான் இல்லை. இதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். 12 நான் வாரத்தில் இரண்டு தடவை விரதம் இருக்கிறேன், எனக்குக் கிடைக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன்’+ என்று மனதுக்குள் ஜெபம் செய்தான். 13 தூரத்தில் நின்றுகொண்டிருந்த வரி வசூலிப்பவனோ, வானத்தைப் பார்ப்பதற்குக்கூட துணியாமல், தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, இந்தப் பாவிக்குக் கருணை காட்டுங்கள்’+ என்று ஜெபம் செய்தான். 14 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்தப் பரிசேயனைவிட இவனே அதிக நீதியுள்ளவனாகத் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான்.+ ஏனென்றால், தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்; தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”+
-