-
மாற்கு 12:1-9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 பின்பு, உவமைகளைப் பயன்படுத்தி பேச ஆரம்பித்தார்; அவர்களிடம், “ஒரு மனுஷர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு,+ அதைச் சுற்றிலும் வேலியடைத்தார். அதில் திராட்சரசத் தொட்டியை அமைத்து, காவலுக்கு ஒரு கோபுரத்தைக் கட்டினார்.+ அதைத் தோட்டக்காரர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டுத் தூர தேசத்துக்குப் போனார்.+ 2 அறுவடைக் காலம் வந்தபோது, தனக்குச் சேர வேண்டிய பங்கை வாங்கி வரச் சொல்லி ஓர் அடிமையை அந்தத் தோட்டக்காரர்களிடம் அனுப்பினார். 3 ஆனால், அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுங்கையோடு அனுப்பிவிட்டார்கள். 4 அதனால், மறுபடியும் வேறொரு அடிமையை அனுப்பினார்; அவர்கள் அவனைத் தலையில் தாக்கி, அவமானப்படுத்தினார்கள்.+ 5 பின்பு இன்னும் ஒருவனை அனுப்பினார், அவனைக் கொன்றுபோட்டார்கள். வேறு பலரையும் அனுப்பினார்; அவர்களில் சிலரை அடித்தார்கள், சிலரைக் கொலை செய்தார்கள். 6 அவருக்கு ஒரு அன்பான மகன்+ இருந்தான்; ‘என் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று நினைத்து, கடைசியாக அவர் தன்னுடைய மகனையே அனுப்பினார். 7 ஆனால் அந்தத் தோட்டக்காரர்கள், ‘இவன்தான் வாரிசு.+ வாருங்கள், நாம் இவனைத் தீர்த்துக்கட்டிவிடலாம், இவனுடைய சொத்து நமக்குக் கிடைத்துவிடும்’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு, 8 அவனைப் பிடித்து, கொலை செய்து, திராட்சைத் தோட்டத்துக்கு வெளியே தூக்கிப்போட்டார்கள்.+ 9 இப்போது, அந்தத் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர் என்ன செய்வார்? அவர் வந்து, அந்தத் தோட்டக்காரர்களைக் கொன்றுவிட்டு, திராட்சைத் தோட்டத்தை மற்றவர்களிடம் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்.+
-
-
லூக்கா 20:9-16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 பின்பு, மக்களிடம் ஒரு உவமையை அவர் சொல்ல ஆரம்பித்தார்; “ஒருவர் திராட்சைத் தோட்டம் போட்டு,+ அதைத் தோட்டக்காரர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு, பல காலமாகத் தூர தேசத்துக்குப் போயிருந்தார்.+ 10 அறுவடைக் காலம் வந்தபோது, தனக்குச் சேர வேண்டிய பங்கை வாங்கி வரச் சொல்லி ஒரு அடிமையை அந்தத் தோட்டக்காரர்களிடம் அனுப்பினார். ஆனால், அந்தத் தோட்டக்காரர்கள் அவனை அடித்து, வெறுங்கையோடு அனுப்பிவிட்டார்கள்.+ 11 மறுபடியும் அவர் வேறொரு அடிமையை அவர்களிடம் அனுப்பினார். அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுங்கையோடு அனுப்பிவிட்டார்கள். 12 மறுபடியும் அவர் மூன்றாவது அடிமையை அனுப்பினார். அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள். 13 அப்போது அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரர், ‘இப்போது என்ன செய்வது? என் அன்பு மகனை+ அனுப்புவேன். ஒருவேளை அவனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லிக்கொண்டார். 14 அந்தத் தோட்டக்காரர்கள் அவருடைய மகனைப் பார்த்ததும், ‘இவன்தான் வாரிசு. வாருங்கள், இவனைத் தீர்த்துக்கட்டிவிட்டு, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளலாம்’ என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். 15 அதன்படியே, அவனைத் திராட்சைத் தோட்டத்துக்கு வெளியே தள்ளி கொலை செய்தார்கள்.+ அப்படியானால், திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர் அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வார்? 16 அவர் வந்து அவர்களைக் கொன்றுபோட்டு, திராட்சைத் தோட்டத்தை மற்றவர்களிடம் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்” என்றார்.
மக்கள் இதைக் கேட்டபோது, “ஒருபோதும் அப்படி நடக்கக் கூடாது!” என்று சொன்னார்கள்.
-