-
மத்தேயு 4:1-10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 பின்பு, கடவுளுடைய சக்தி இயேசுவை வனாந்தரத்துக்கு வழிநடத்தியது; அங்கே பிசாசு அவரைச் சோதித்தான்.+ 2 அவர் 40 நாட்கள் இரவும் பகலும் விரதம் இருந்த பின்பு, அவருக்குப் பசியெடுத்தது. 3 அப்போது, அந்தச் சோதனைக்காரன்+ அவரிடம் வந்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாகும்படி சொல்” என்றான். 4 அதற்கு இயேசு, “‘உணவால்* மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனுஷன் உயிர்வாழ்வான்’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.
5 பின்பு, பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்துக்குக்+ கொண்டுபோய், ஆலயத்தின் உயரமான இடத்தில் அவரை நிற்க வைத்து,+ 6 “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், கீழே குதி; ‘அவர் உன்னைக் குறித்து தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார். உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னான். 7 அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய யெகோவாவை சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனவும் எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.
8 மறுபடியும் பிசாசு அவரை மிக மிக உயரமான ஒரு மலைக்குக் கொண்டுபோய், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காட்டி,+ 9 “நீ ஒரேவொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால், இவை எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்” என்று சொன்னான். 10 அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்,+ அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’+ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார்.
-
-
லூக்கா 4:1-13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்ட இயேசு யோர்தானைவிட்டுத் திரும்பினார்; அவர் 40 நாட்கள் வனாந்தரத்தில் இருந்தபோது கடவுளுடைய சக்தி அவரை வழிநடத்தியது.+ 2 அந்த 40 நாட்களும் அவர் ஒன்றுமே சாப்பிடாததால் அதன்பின் அவருக்குப் பசியெடுத்தது. அப்போது பிசாசு அவரைச் சோதித்தான்.+ 3 அவன் அவரிடம், “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கல்லை ரொட்டியாகும்படி சொல்” என்றான். 4 அதற்கு இயேசு, “‘மனுஷன் உணவால்* மட்டுமே உயிர்வாழக் கூடாது’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.
5 அதனால், பிசாசு அவரை உயரமான இடத்துக்குக் கொண்டுபோய், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் ஒரே நொடியில் அவருக்குக் காட்டி,+ 6 “இவை எல்லாவற்றின் மீதுள்ள அதிகாரத்தையும் இவற்றின் மகிமையையும் நான் உனக்குத் தருவேன்; ஏனென்றால், இந்த அதிகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது;+ எனக்கு இஷ்டமானவனுக்கு இதைக் கொடுப்பேன். 7 நீ ஒரேவொரு தடவை என்னை வணங்கினால் இதெல்லாம் உனக்குச் சொந்தமாகும்” என்று சொன்னான். 8 அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய யெகோவாவை* மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.
9 பின்பு, அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், ஆலயத்தின் உயரமான இடத்தில்* அவரை நிற்க வைத்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இங்கிருந்து கீழே குதி.+ 10 ஏனென்றால், ‘உன்னைப் பாதுகாக்கச் சொல்லி அவர் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார்.’ 11 ‘உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறது”+ என்று சொன்னான். 12 அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய யெகோவாவை* சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனச் சொல்லப்பட்டிருக்கிறதே”+ என்றார். 13 பிசாசு எல்லா சோதனைகளையும் முடித்த பின்பு, வேறொரு நல்ல சந்தர்ப்பம் வரும்வரை அவரைவிட்டு விலகிப்போனான்.+
-