-
மத்தேயு 17:14-17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 கூட்டத்தாரை+ நோக்கி அவர்கள் போனபோது, ஒருவன் அவர் முன்னால் வந்து மண்டிபோட்டு, 15 “ஐயா, என் மகனுக்கு இரக்கம் காட்டுங்கள்; அவன் காக்காய்வலிப்பினால் அவதிப்படுகிறான்; அவனுடைய நிலைமை மோசமாக இருக்கிறது; அடிக்கடி தண்ணீரிலும் நெருப்பிலும் விழுந்துவிடுகிறான்;+ 16 நான் அவனை உங்கள் சீஷர்களிடம் கூட்டிக்கொண்டு வந்தேன், ஆனால் அவர்களால் குணமாக்க முடியவில்லை” என்று சொன்னான். 17 அப்போது இயேசு, “விசுவாசமில்லாத சீர்கெட்ட* தலைமுறையே,+ நான் இன்னும் எத்தனை காலம்தான் உங்களோடு இருக்க வேண்டுமோ? எத்தனை காலம்தான் உங்களைச் சகித்துக்கொள்ள வேண்டுமோ?” என்று சொல்லிவிட்டு, “அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார்.
-
-
லூக்கா 9:38-42பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
38 அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், “போதகரே, உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், என் மகனுக்கு உதவி செய்யுங்கள்,* அவன் எனக்கு ஒரே மகன்.+ 39 அவனை ஒரு பேய் பிடித்துக்கொள்கிறது, திடீர் திடீரென்று கத்த வைக்கிறது; அவனுக்கு வலிப்பு உண்டாக்கி வாயில் நுரை தள்ள வைக்கிறது; அவனைக் காயப்படுத்திய பிறகும் எளிதில் அவனைவிட்டுப் போவதில்லை. 40 அந்தப் பேயை விரட்டச் சொல்லி உங்கள் சீஷர்களிடம் கெஞ்சினேன், அவர்களால் முடியவில்லை” என்று சொன்னார். 41 அப்போது இயேசு, “விசுவாசமில்லாத சீர்கெட்ட தலைமுறையே!+ நான் இன்னும் எத்தனை காலம்தான் உங்களோடிருந்து உங்களைச் சகித்துக்கொள்ள வேண்டுமோ?” என்று சொல்லிவிட்டு, “உன் மகனை இங்கே கொண்டுவா”+ என்றார். 42 அவன் வந்துகொண்டிருந்தபோதே, அந்தப் பேய் அவனைக் கீழே தள்ளி அவனுக்குப் பயங்கரமாக வலிப்பு உண்டாக்கியது. ஆனாலும், இயேசு அந்தப் பேயை அதட்டி, அந்தப் பையனைக் குணமாக்கி, அவனுடைய அப்பாவிடம் ஒப்படைத்தார்.
-