-
யாத்திராகமம் 26:31-33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச்+ செய்ய வேண்டும். அதன்மேல் கேருபீன்களின் வடிவத்தில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும். 32 வேல மரத்தால் செய்யப்பட்டு, தங்கத்தால் தகடு அடிக்கப்பட்ட நான்கு தூண்களில் இந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட வேண்டும். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்ய வேண்டும். வெள்ளியில் செய்யப்பட்ட நான்கு பாதங்களின் மேல் இந்தத் தூண்களை நிறுத்த வேண்டும். 33 இந்தத் திரைச்சீலையைக் கூடார விரிப்புகள் இணைக்கப்பட்ட கொக்கிகளுக்குக் கீழே மாட்ட வேண்டும். திரைச்சீலைக்கு உள்பக்கம் சாட்சிப் பெட்டியை+ வைக்க வேண்டும். இந்தத் திரைச்சீலை பரிசுத்த அறையையும்+ மகா பரிசுத்த அறையையும்+ பிரிக்கும்.
-