-
மத்தேயு 8:16, 17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 சாயங்கால நேரமானபோது, பேய் பிடித்த நிறைய பேரை மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்; அவர் ஒரு வார்த்தை சொன்னதும், அந்தப் பேய்கள்* அவர்களைவிட்டு ஓடிவிட்டன; எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். 17 “அவர் நம்முடைய வியாதிகளைத் தாங்கிக்கொண்டு, நம் நோய்களைச் சுமந்தார்”+ என்று ஏசாயா தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.
-
-
மாற்கு 1:32-34பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
32 சாயங்காலத்தில், சூரியன் மறைந்த பின்பு, எல்லா நோயாளிகளையும் பேய் பிடித்தவர்களையும் மக்கள் அவரிடம் கொண்டுவர ஆரம்பித்தார்கள்.+ 33 அந்த வீட்டு வாசலில் ஊரே திரண்டு வந்தது. 34 பலவிதமான நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த நிறைய பேரை அவர் குணமாக்கினார்,+ ஏராளமான பேய்களைத் துரத்தினார்; ஆனால், அவர்தான் கிறிஸ்து* என்று அந்தப் பேய்களுக்குத் தெரிந்திருந்ததால், அவர் அவற்றைப் பேசவிடவில்லை.
-