-
மத்தேயு 13:3-9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அப்போது, உவமைகள் மூலம் அவர்களுக்கு நிறைய விஷயங்களைச் சொன்னார்.+ “இதோ! விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் போனான்.+ 4 அவன் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன.+ 5 வேறு சில விதைகள் மண் அதிகமாக இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன; அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் வேர்பிடிக்கவில்லை.+ 6 அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கி காய்ந்துபோயின. 7 இன்னும் சில விதைகள் முட்செடிகள் இருக்கிற நிலத்தில் விழுந்தன; அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன.+ 8 மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, விளைச்சல் தர ஆரம்பித்தன; அவற்றில் சில 100 மடங்காகவும், வேறு சில 60 மடங்காகவும், இன்னும் சில 30 மடங்காகவும் பலன் தந்தன.+ 9 காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்”+ என்று சொன்னார்.
-
-
மாற்கு 4:3-9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 “கேளுங்கள்; விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் போனான்.+ 4 அவன் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன. 5 வேறு சில விதைகள் மண் அதிகமாக இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன; அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் வேர்பிடிக்கவில்லை.+ 6 அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கி காய்ந்துபோயின. 7 இன்னும் சில விதைகள் முட்செடிகள் இருக்கிற நிலத்தில் விழுந்தன; அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன, அதனால் அவை எந்தப் பலனையும் தரவில்லை.+ 8 மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன; அவை முளைத்து, பெரிதாக வளர்ந்து, விளைச்சல் தர ஆரம்பித்தன; அவை 30 மடங்காகவும் 60 மடங்காகவும் 100 மடங்காகவும் பலன் தந்தன”+ என்று சொன்னார். 9 இப்படிச் சொல்லிவிட்டு, “கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்”+ என்றார்.
-