-
மத்தேயு 8:24-27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 அப்போது, கடலில் பயங்கர புயல்காற்று வீசியது; பெரிய அலைகள் அடித்ததால் படகு தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தது; அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.+ 25 சீஷர்கள் வந்து அவரை எழுப்பி, “எஜமானே, காப்பாற்றுங்கள், நாம் சாகப்போகிறோம்!” என்று சொன்னார்கள். 26 ஆனால் அவர், “விசுவாசத்தில் குறைவுபடுகிறவர்களே, ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்?”+ என்று கேட்டார். பின்பு எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார்; அப்போது, மிகுந்த அமைதி உண்டானது.+ 27 அவர்கள் பிரமித்துப்போய், “இவர் உண்மையில் யார்? காற்றும் கடலும்கூட இவருக்கு அடங்கிவிடுகின்றனவே!” என்று சொன்னார்கள்.
-
-
மாற்கு 4:37-41பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
37 அப்போது, படுபயங்கரமான புயல்காற்று வீச ஆரம்பித்தது; அலைகள் படகின் மேல் வேகமாக மோதிக்கொண்டிருந்ததால், படகு கிட்டத்தட்ட மூழ்கிவிடும் நிலையில் இருந்தது.+ 38 ஆனால், அவர் படகின் பின்புறத்தில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அதனால், அவர்கள் அவரை எழுப்பி, “போதகரே, நாம் சாகப்போகிறோம்! உங்களுக்குக் கவலையே இல்லையா?” என்று கேட்டார்கள். 39 அப்போது, அவர் எழுந்து காற்றை அதட்டினார்; கடலைப் பார்த்து, “உஷ்! அமைதியாக இரு!”+ என்று சொன்னார். அப்போது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டானது. 40 அதன் பின்பு, “ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? இன்னும் உங்களுக்கு விசுவாசம் வரவில்லையா?” என்று அவர்களிடம் கேட்டார். 41 ஆனால் அவர்கள் பீதியடைந்து, “இவர் உண்மையில் யார்? காற்றும் கடலும்கூட இவருக்கு அடங்கிவிடுகின்றனவே!”+ என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
-