-
மத்தேயு 22:41-46பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
41 பரிசேயர்கள் ஒன்றுகூடியிருந்தபோது இயேசு அவர்களிடம்,+ 42 “நீங்கள் கிறிஸ்துவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “தாவீதின் மகன்”+ என்று சொன்னார்கள். 43 அப்போது அவர், “அப்படியானால், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தாவீது+ அவரை எஜமான் என்று அழைத்தது எப்படி? 44 ‘யெகோவா என் எஜமானிடம், “உன்னுடைய எதிரிகளை நான் உன் காலடியில் வீழ்த்தும்வரை நீ என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்றார்’+ என தாவீது சொன்னாரே. 45 தாவீதே அவரை எஜமான் என்று அழைத்திருப்பதால் அவர் எப்படி இவருடைய மகனாக இருக்க முடியும்?”+ என்று அவர்களிடம் கேட்டார். 46 யாராலும் ஒரு வார்த்தைகூட பதில் சொல்ல முடியவில்லை; அன்றுமுதல் அவரிடம் கேள்வி கேட்பதற்கு யாருக்குமே துணிச்சல் வரவில்லை.
-
-
மாற்கு 12:35-37பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
35 ஆலயத்தில் இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது அவர்களிடம், “கிறிஸ்துவை தாவீதின் மகன்+ என்று வேத அறிஞர்கள் எப்படிச் சொல்கிறார்கள்? 36 ‘யெகோவா* என் எஜமானிடம், “உன்னுடைய எதிரிகளை நான் உன் காலடியில் வீழ்த்தும்வரை நீ என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார்’ எனக் கடவுளுடைய சக்தியால்+ தாவீது சொன்னார். 37 தாவீதே அவரை எஜமான் என்று அழைத்திருப்பதால் அவர் எப்படி இவருடைய மகனாக இருக்க முடியும்?”+ என்று கேட்டார்.
அவர் பேசியதை ஏராளமான மக்கள் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
-