-
அப்போஸ்தலர் 4:1, 2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, குருமார்களும் ஆலயத்தின் காவல் தலைவரும் சதுசேயர்களும்+ அவர்களிடம் வந்தார்கள். 2 அந்த அப்போஸ்தலர்கள் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டும், இயேசு உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார் என வெளிப்படையாக அறிவித்துக்கொண்டும் இருந்ததைப் பார்த்து அவர்கள் எரிச்சலடைந்தார்கள்.+
-
-
அப்போஸ்தலர் 5:27, 28பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 பின்பு, அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்து நியாயசங்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது தலைமைக் குரு அவர்களிடம், 28 “இந்தப் பெயரில் கற்பிக்கக் கூடாதென்று நாங்கள் உங்களுக்குக் கண்டிப்புடன் கட்டளை கொடுத்திருந்தோம்;+ அப்படியிருந்தும், எருசலேம் முழுவதையும் உங்கள் போதனையால் நிரப்பியிருக்கிறீர்கள்; அந்த மனுஷனுடைய சாவுக்கு எங்கள்மேல் பழிபோட* குறியாக இருக்கிறீர்கள்”+ என்று சொன்னார்.
-