-
உபாகமம் 12:5, 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகவும் தான் குடிகொள்வதற்காகவும் உங்கள் கோத்திரங்களின் நடுவில் எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த இடத்துக்குப் போய் அவரை வணங்க வேண்டும்.+ 6 உங்களுடைய தகன பலிகளையும்,+ மற்ற பலிகளையும், பத்திலொரு பாகங்களையும்,+ காணிக்கைகளையும்,+ நீங்கள் நேர்ந்துகொண்ட பலிகளையும், நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலிகளையும்,+ ஆடுமாடுகளின் முதல் குட்டிகளையும் அங்கேதான் கொண்டுவர வேண்டும்.+
-
-
சங்கீதம் 122:மேல்குறிப்பு-9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். தாவீதின் பாடல்.
122 “யெகோவாவின் ஆலயத்துக்குப் போகலாம், வாருங்கள்” என்று
அவர்கள் கூப்பிட்டபோது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.+
4 இஸ்ரவேல் கோத்திரங்கள் அங்கே ஏறிப்போயிருக்கின்றன.
“யா”வின்* மக்கள் அங்கே ஏறிப்போயிருக்கிறார்கள்.
அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நினைப்பூட்டுதலின்படி,
யெகோவாவின் பெயருக்கு நன்றி சொல்ல அங்கே போயிருக்கிறார்கள்.+
6 எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.+
நகரமே, உன்னை நேசிக்கிறவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
7 உன் அரண்களுக்குள் எப்போதும் சமாதானம் இருக்கட்டும்.
உன் கோட்டைகளுக்குள் எப்போதும் பாதுகாப்பு இருக்கட்டும்.
8 “உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் சொல்வேன்.
என் சகோதரர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் அப்படிச் சொல்வேன்.
-