உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 26:6-10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 6 பெத்தானியாவில், முன்பு தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டில் இயேசு+ சாப்பிட* உட்கார்ந்திருந்தார். 7 அப்போது ஒரு பெண், விலை உயர்ந்த வாசனை எண்ணெயை வெண்சலவைக்கல் குப்பி ஒன்றில் எடுத்துவந்து, அதை அவருடைய தலையில் ஊற்ற ஆரம்பித்தாள். 8 அதைப் பார்த்த சீஷர்கள் கோபப்பட்டு, “ஏன் இதை இப்படி வீணாக்குகிறாள்? 9 இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்று பேசிக்கொண்டார்கள். 10 இயேசு அதைத் தெரிந்துகொண்டு, “ஏன் இந்தப் பெண்ணின் மனதை நோகடிக்கிறீர்கள்? இவள் எனக்கு நல்லதுதான் செய்தாள்.

  • மாற்கு 14:3-6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 3 பெத்தானியாவில், முன்பு தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டில் இயேசு சாப்பிட உட்கார்ந்திருந்தார்; அப்போது ஒரு பெண் சுத்தமான, மிகவும் விலை உயர்ந்த சடாமாஞ்சி என்ற வாசனை எண்ணெயை வெண்சலவைக்கல் குப்பி ஒன்றில் எடுத்து வந்தாள். அவள் அந்தக் குப்பியை உடைத்து, அதிலிருந்த எண்ணெயை அவருடைய தலையில் ஊற்ற ஆரம்பித்தாள்.+ 4 அதைப் பார்த்த சிலர் எரிச்சலடைந்து, “இந்த வாசனை எண்ணெயை ஏன் இப்படி வீணாக்குகிறாள்? 5 இதை 300 தினாரியுவுக்கும்* அதிகமாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே!” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். அவள்மேல் அவர்கள் பயங்கர எரிச்சல் அடைந்தார்கள்.* 6 ஆனால் இயேசு, “இவளை ஒன்றும் சொல்லாதீர்கள். ஏன் இவளுடைய மனதை நோகடிக்கிறீர்கள்? இவள் எனக்கு நல்லதுதான் செய்தாள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்