உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 26:14-16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 பின்பு, பன்னிரண்டு பேரில்* ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து+ முதன்மை குருமார்களிடம் போய்,+ 15 “அவரைக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?”+ என்று கேட்டான். அவர்கள் 30 வெள்ளிக் காசுகள் கொடுப்பதாக அவனோடு ஒப்பந்தம் செய்தார்கள்.+ 16 அதுமுதல், அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சரியான சந்தர்ப்பத்தை அவன் தேடிக்கொண்டே இருந்தான்.

  • மத்தேயு 26:24
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 24 மனிதகுமாரன் தன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறபடியே உங்களைவிட்டுப் போகிறார் என்பது உண்மைதான்; ஆனால், மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக்+ கேடுதான் வரும்!+ அவன் பிறக்காமல் இருந்திருந்தாலே அவனுக்கு நல்லதாக இருந்திருக்கும்”+ என்று சொன்னார்.

  • மாற்கு 14:10, 11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 அவரைக் காட்டிக்கொடுப்பதற்காக, பன்னிரண்டு பேரில்* ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து முதன்மை குருமார்களிடம் போனான்.+ 11 அவன் சொன்னதைக் கேட்டபோது அவர்கள் மனம் குளிர்ந்துபோய், அவனுக்கு வெள்ளிக் காசுகள் தருவதாக வாக்குக் கொடுத்தார்கள்.+ அதனால், அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு அவன் சந்தர்ப்பம் தேட ஆரம்பித்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்