-
அப்போஸ்தலர் 4:29, 30பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 இப்போதும் யெகோவாவே,* அவர்களுடைய மிரட்டல்களைக் கவனியுங்கள்; உங்கள் வார்த்தையை முழு தைரியத்தோடு பேசிக்கொண்டே இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உதவி செய்யுங்கள். 30 உங்கள் கையை நீட்டி உங்களுடைய பரிசுத்த ஊழியராகிய இயேசுவின் பெயரில்+ நோயாளிகள் குணமாகும்படி செய்யுங்கள், அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்யுங்கள்”+ என்று மன்றாடினார்கள்.
-
-
அப்போஸ்தலர் 6:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 கடவுளுடைய கருணையும் வல்லமையும் நிறைந்தவரான ஸ்தேவான் பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் மக்கள் மத்தியில் செய்துவந்தார்.
-
-
அப்போஸ்தலர் 15:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அப்போது, அங்கே கூடியிருந்த எல்லாரும் அமைதியாகி, பர்னபா சொல்வதையும் பவுல் சொல்வதையும் கவனமாகக் கேட்க ஆரம்பித்தார்கள். மற்ற தேசத்து மக்கள் மத்தியில் பல அடையாளங்களையும் அற்புதங்களையும் கடவுள் தங்கள் மூலம் செய்ததை அவர்கள் இரண்டு பேரும் விவரித்துச் சொன்னார்கள்.
-
-
ரோமர் 15:18, 19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 மற்ற தேசத்து மக்கள் கீழ்ப்படிவதற்காகக் கிறிஸ்து என் மூலம் செய்தவற்றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேசுவதற்கு நான் துணிய மாட்டேன். என்னுடைய சொல்லாலும் செயலாலும், 19 அற்புதங்களாலும் அடையாளங்களாலும்,+ கடவுளுடைய சக்தியின் வல்லமையாலும் எல்லாவற்றையும் அவர் செய்தார். அதனால், நான் எருசலேமிலிருந்து இல்லிரிக்கம்வரை சுற்றிலும் போய், கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியை முழுமையாகப் பிரசங்கித்திருக்கிறேன்.+
-