-
அப்போஸ்தலர் 10:10-16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அவர் மிகவும் பசியாக இருந்ததால் சாப்பிட விரும்பினார். சாப்பாடு தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் ஒரு தரிசனத்தைப் பார்த்தார்.*+ 11 வானம் திறந்திருப்பதையும், பெரிய நாரிழை* விரிப்பைப் போன்ற ஒன்று நான்கு முனைகளில் கட்டப்பட்டு பூமியில் இறக்கிவிடப்படுவதையும் பார்த்தார். 12 பூமியில் இருக்கிற எல்லா வகையான நான்கு கால் விலங்குகளும் ஊரும் பிராணிகளும் வானத்துப் பறவைகளும் அதில் இருந்தன. 13 அப்போது, “பேதுருவே, நீ எழுந்து இவற்றை அடித்துச் சாப்பிடு!” என்ற குரல் கேட்டது. 14 ஆனால் பேதுரு, “வேண்டவே வேண்டாம் எஜமானே, தீட்டானதையும் அசுத்தமானதையும் நான் ஒருபோதும் சாப்பிட்டதில்லை”+ என்று சொன்னார். 15 அந்தக் குரல் இரண்டாவது தடவை அவரிடம், “கடவுள் சுத்தமாக்கியவற்றைத் தீட்டென்று சொல்லாதே” என்றது. 16 மூன்றாவது தடவையும் அந்தக் குரல் கேட்டது. உடனடியாக அந்த விரிப்பு வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
-