4 ஒருநாள், இஸ்ரவேலின் பெரியோர்கள் எல்லாரும் ராமாவிலிருந்த சாமுவேலிடம் வந்து, 5 “உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்களுடைய மகன்களும் உங்களைப் போல நேர்மையாக நடப்பதில்லை. அதனால், மற்ற தேசங்களுக்கு ராஜா இருப்பது போல எங்களுக்கும் ஒரு ராஜா வேண்டும். அவர் எங்களுக்கு நீதி வழங்கட்டும்”+ என்று சொன்னார்கள்.