58 பின்பு, நகரத்துக்கு வெளியே அவரைக் கொண்டுபோய், அவர்மேல் கல்லெறிய ஆரம்பித்தார்கள்.+ அவருக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்கள்+ தங்களுடைய மேலங்கிகளை சவுல் என்ற இளம் மனிதனுடைய காலடியில் வைத்தார்கள்.+
8ஸ்தேவானைக் கொலை செய்வதற்கு சவுலும் உடந்தையாக இருந்தான்.+
அந்த நாளில், எருசலேமிலிருந்த சபைக்குக் கடுமையான துன்புறுத்தல் வந்தது; அப்போஸ்தலர்களைத் தவிர மற்ற எல்லாரும் யூதேயா, சமாரியா பகுதிகள் முழுவதும் சிதறிப்போனார்கள்.+
13 முன்பு நான் துன்புறுத்துகிறவனாகவும், கடவுளை நிந்திக்கிறவனாகவும், திமிர்பிடித்தவனாகவும் இருந்தேன்.+ ஆனாலும், அறியாமையின் காரணமாக நான் விசுவாசமில்லாமல் நடந்துகொண்டதால் அவர் என்மேல் இரக்கம் காட்டினார்.
15 பாவிகளை மீட்பதற்காகக் கிறிஸ்து இயேசு உலகத்துக்கு வந்தார்+ என்ற வார்த்தை உண்மையானது, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. அந்தப் பாவிகளில் பெரும் பாவி நான்தான்.+