-
மத்தேயு 18:15-17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்துவிட்டால், அவரிடம் தனியாகப் போய் அவர் செய்த தவறை எடுத்துச் சொல்லுங்கள்;*+ நீங்கள் சொல்வதை அவர் காதுகொடுத்துக் கேட்டால், நீங்கள் அவரை நல்ல வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள்.+ 16 நீங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை என்றால், ஒருவரையோ இருவரையோ உங்களோடு கூட்டிக்கொண்டு போய்ப் பேசுங்கள். ஏனென்றால், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலம்* எல்லா விஷயங்களையும்* உறுதிசெய்யும்.*+ 17 அவர்கள் சொல்வதையும் அவர் கேட்கவில்லை என்றால்,* சபைக்குத் தெரியப்படுத்துங்கள். சபை சொல்வதையும் அவர் கேட்கவில்லை என்றால்,* அவர் உங்களுக்கு மற்ற தேசத்தாரைப் போலவும்+ வரி வசூலிப்பவரைப் போலவும் இருக்கட்டும்.+
-