-
2 கொரிந்தியர் 12:9, 10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அவரோ, “என் அளவற்ற கருணை உனக்குப் போதும். நீ பலவீனமாக இருக்கும்போது என்னுடைய பலம் உனக்கு முழுமையாகக் கிடைக்கும்”+ என்று சொன்னார். அதனால், கிறிஸ்துவின் வல்லமை எனக்கு ஒரு கூடாரம்போல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் மிகுந்த சந்தோஷத்தோடு என் பலவீனங்களைப் பற்றிப் பெருமை பேசுவேன். 10 எனக்கு ஏற்படுகிற பலவீனங்கள், அவமானங்கள், நெருக்கடிகள், துன்புறுத்தல்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை கிறிஸ்துவுக்காகச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்.+
-