29 நான் போன பின்பு கொடிய ஓநாய் போன்ற ஆட்கள் உங்கள் நடுவில் நுழைவார்கள்+ என்பது எனக்குத் தெரியும். கடவுளுடைய மந்தையை அவர்கள் மென்மையாக நடத்த மாட்டார்கள். 30 அதோடு, உங்கள் மத்தியிலிருந்தே சிலர் எழும்பி சீஷர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துச் சொல்வார்கள்.+
16 ஆனால், பரிசுத்தமான விஷயங்களுக்கு விரோதமான வீண் பேச்சுகளை அடியோடு தவிர்த்து விடு;+ ஏனென்றால், கடவுள்பக்தியற்ற செயல்களை அதிகமதிகமாகச் செய்வதற்குத்தான் அவை வழிநடத்தும்.*
3 அவர்கள் தங்களுடைய போலிப் போதனைகளால் உங்களைப் பேராசையோடு சுரண்டிப் பிழைப்பார்கள்; ஆனால், பல காலத்துக்கு முன்பே அவர்களுக்குத் தீர்மானிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பு+ தாமதிக்காது, அவர்களுக்கு அழிவு வரப்போவது நிச்சயம்.+