சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; “தூரத்தில் இருக்கிற அமைதிப் புறா” என்ற இசையில்; மிக்தாம்.* காத் நகரத்தில்+ பெலிஸ்தியர்கள் தாவீதைப் பிடித்த சமயத்தில் அவர் பாடிய பாடல்.
56 கடவுளே, எனக்குக் கருணை காட்டுங்கள்; அற்ப மனுஷன் என்னைத் தாக்குகிறான்.
நாள் முழுவதும் எதிரிகள் என்னோடு சண்டை போடுகிறார்கள், என்னை அடக்கி ஒடுக்குகிறார்கள்.
2 நாள் முழுவதும் என் விரோதிகள் என்னைக் கடித்துக் குதறப் பார்க்கிறார்கள்.
நிறைய பேர் ஆணவத்தோடு என்னை எதிர்த்துச் சண்டை போடுகிறார்கள்.
3 எனக்குப் பயமாக இருக்கும்போது+ உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்.+
4 கடவுளுடைய வார்த்தையை நான் புகழ்கிறேன்.
கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; அதனால் பயப்பட மாட்டேன்.
அற்ப மனுஷனால் என்னை என்ன செய்ய முடியும்?+
5 எதிரிகள் நாளெல்லாம் எனக்குத் தொல்லை கொடுக்கிறார்கள்.
எனக்குக் கெடுதல் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.+
6 என்னைத் தாக்குவதற்குப் பதுங்கியிருக்கிறார்கள்.
நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் நோட்டமிடுகிறார்கள்.+
என்னைத் தீர்த்துக்கட்டுவதற்குத் துடிக்கிறார்கள்.+
7 கடவுளே, அவர்கள் அக்கிரமம் செய்வதால் அவர்களை ஒதுக்கித்தள்ளுங்கள்.
கோபத்தில் அவர்களைத் தண்டியுங்கள்.+
8 என் அலைச்சல்களை நீங்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.+
என் கண்ணீர்த் துளிகளைத் தயவுசெய்து உங்களுடைய தோல் பையில் சேர்த்து வையுங்கள்.+
நீங்கள் அவற்றையெல்லாம் எண்ணி உங்களுடைய புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறீர்களே!+
9 உதவிக்காக நான் உங்களைக் கூப்பிடும் நாளில், என் எதிரிகள் பின்வாங்கி ஓடுவார்கள்.+
கடவுள் என் பக்கத்தில் இருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.+
10 கடவுளுடைய வார்த்தையை நான் புகழ்கிறேன்.
யெகோவாவின் வார்த்தையைப் புகழ்கிறேன்.
11 கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; அதனால் பயப்பட மாட்டேன்.+
அற்ப மனுஷனால் என்னை என்ன செய்ய முடியும்?+