சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; “லில்லி மலர்கள்” இசையில்; கோராகுவின் மகன்களுடைய+ பாடல். மஸ்கீல்.* நேசப் பாடல்.
45 ஒரு அருமையான விஷயத்தால் என் இதயம் பொங்குகிறது.
நான் பாடும் இந்தப் பாடல் ஒரு ராஜாவைப் பற்றியது.+
என் நாவு திறமையாக நகலெடுப்பவரின்*+ எழுத்தாணி*+ போல ஆகட்டும்.
2 நீங்கள்தான் எல்லா ஆண்களையும்விட மிக அழகானவர்.
கனிவான பேச்சு உங்கள் உதடுகளிலிருந்து பொழிகிறது.+
அதனால்தான், கடவுள் உங்களை என்றென்றும் ஆசீர்வதித்திருக்கிறார்.+
4 கம்பீரமாகப் போய் எதிரிகளை வெல்லுங்கள்.+
சத்தியத்துக்காகவும் மனத்தாழ்மைக்காகவும் நீதிக்காகவும் போர் செய்ய
குதிரையில் ஏறிப் போங்கள்.+
உங்கள் வலது கை பிரமிப்பான காரியங்களைச் செய்யும்.
5 உங்களுடைய அம்புகள் கூர்மையாக இருக்கின்றன.
ஜனங்களை உங்கள்முன் விழ வைக்கின்றன.+
ராஜாவின் எதிரிகளுடைய இதயத்தில் பாய்கின்றன.+
7 நீங்கள் நீதியை நேசித்தீர்கள்,+ அக்கிரமத்தை வெறுத்தீர்கள்.+
அதனால்தான், உங்கள் கடவுள் மற்ற ராஜாக்களைவிட அதிகமாக
உங்களை ஆனந்தத் தைலத்தால்+ அபிஷேகம் செய்தார்.+
8 வெள்ளைப்போளம்,* அகில், கருவாய்ப்பட்டை ஆகியவற்றின் வாசனை உங்கள் உடைகளில் வீசுகிறது.
யானைத்தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான அரண்மனையில் வாசிக்கப்படுகிற
நரம்பிசைக் கருவிகளின் இசை உங்களைச் சந்தோஷத்தால் நிரப்புகிறது.
9 உங்கள் அரசவையில் உள்ள மதிப்புக்குரிய பெண்களில் ராஜாக்களின் மகள்களும் இருக்கிறார்கள்.
ஓப்பீரின் தங்க+ நகைகளை அணிந்த பட்டத்து ராணி உங்கள் வலது பக்கத்தில் நிற்கிறாள்.
10 மகளே, கேள். காதுகொடுத்துக் கவனமாகக் கேள்.
உன் மக்களையும் உன் அப்பாவின் வீட்டையும் மறந்துவிடு.
12 தீரு மகள் அன்பளிப்போடு வருவாள்.
செல்வச்சீமான்கள் உன் தயவைத் தேடி வருவார்கள்.
13 அரண்மனையிலே ராஜாவின் மகள் பேரழகோடு ஜொலிக்கிறாள்.
தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடையில் மின்னுகிறாள்.
14 கலைநயத்தோடு நெய்யப்பட்ட* உடையில் அவள் ராஜாவுக்குமுன் அழைத்து வரப்படுவாள்.
அவளுக்குப் பின்னால் வரும் தோழிகளான கன்னிகளும் அவர்முன் அழைத்து வரப்படுவார்கள்.
15 அவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.
அவர்கள் ராஜாவின் அரண்மனைக்குள் நுழைவார்கள்.
16 உங்கள் முன்னோர்களின் இடத்தில் உங்கள் மகன்கள் இருப்பார்கள்.
அவர்களை அதிபதிகளாக நீங்கள் பூமியெங்கும் நியமிப்பீர்கள்.+
17 தலைமுறை தலைமுறைக்கும் நான் உங்கள் பெயரை அறிவிப்பேன்.+
அதனால், மக்கள் எல்லாரும் உங்களை என்றென்றும் புகழ்வார்கள்.