சங்கீதம்
ஆசாப்பின்+ சங்கீதம்.
2 “இன்னும் எவ்வளவு காலம்தான் அநியாயமாகத் தீர்ப்பு சொல்வீர்கள்?+
எவ்வளவு காலம்தான் பொல்லாதவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்?+ (சேலா)
3 எளியவர்களுக்கும் அநாதைகளுக்கும்* நீதி செய்யுங்கள்.+
ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் நியாயம் வழங்குங்கள்.+
4 ஏழை எளியவர்களைக் காப்பாற்றுங்கள்.
பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களை விடுவியுங்கள்.”
5 இந்த நீதிபதிகளுக்கு ஒன்றும் தெரியாது, எதுவும் புரியாது.+
இவர்கள் எல்லாரும் இருட்டில் நடக்கிறார்கள்.
பூமியின் அஸ்திவாரங்களெல்லாம் அசைக்கப்படுகின்றன.+