சங்கீதம்
ஒரு பாடல். கோராகுவின் மகன்களுடைய சங்கீதம்.+ இசைக் குழுவின் தலைவனுக்கு; மகலாத்* பாணியில் மாறி மாறி பாட வேண்டியது. எஸ்ராகியனான ஏமானின்+ மஸ்கீல்.*
4 சவக்குழிக்குள் போகிறவர்களின் கணக்கில் நான் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுவிட்டேன்.+
நாதியில்லாதவனாக* ஆகிவிட்டேன்.+
5 இறந்தவர்களைப் போல நான் கைவிடப்பட்டேன்.
கொல்லப்பட்டுக் கல்லறையில் கிடக்கிறவர்களைப் போல ஆகிவிட்டேன்.
இனியும் உங்கள் நினைவில் அவர்கள் இல்லையே!
இனியும் உங்கள் அரவணைப்பு அவர்களுக்குக் கிடைப்பதில்லையே!
6 நீங்கள் என்னைப் படுகுழிக்குள் தள்ளிவிட்டீர்கள்.
இருட்டான இடத்தில், பெரிய அதலபாதாளத்தில், தள்ளிவிட்டீர்கள்.
7 உங்களுடைய கடும் கோபம் என்னைப் பயங்கரமாக அழுத்துகிறது.+
சீறிவருகிற உங்கள் அலைகள் என்மேல் மோதியடிக்கின்றன. (சேலா)
8 என் நண்பர்களை என்னைவிட்டுத் தூரமாகத் துரத்திவிட்டீர்கள்.+
அவர்கள் என்னை அருவருப்பாகப் பார்க்கும்படி செய்துவிட்டீர்கள்.
நான் வெளியே வர முடியாதபடி அடைபட்டிருக்கிறேன்.
9 சோகத்தில் என் கண்கள் சோர்ந்துவிட்டன.+
யெகோவாவே, நாள் முழுவதும் உங்களைக் கூப்பிடுகிறேன்.+
என் கைகளை விரித்து உங்களிடம் வேண்டுகிறேன்.
10 இறந்தவர்களுக்காக நீங்கள் அற்புதங்கள் செய்வீர்களா?
செத்துக் கிடக்கிறவர்கள்* எழுந்துவந்து உங்களைப் புகழ முடியுமா?+ (சேலா)
11 கல்லறையில் இருக்கிறவர்கள் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிப் பேசுவார்களா?
புதைகுழியில் இருக்கிறவர்கள் உங்களுடைய நம்பகத்தன்மையை* பற்றிச் சொல்வார்களா?
13 ஆனாலும் யெகோவாவே, நான் உதவிக்காக உங்களிடம் கதறுகிறேன்.+
ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள்முன் ஜெபம் செய்கிறேன்.+
14 யெகோவாவே, என்னை ஏன் ஒதுக்கித்தள்ளுகிறீர்கள்?+
உங்கள் முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைத்துக்கொள்கிறீர்கள்?+
15 சிறுவயதிலிருந்தே நான் கஷ்டங்களை அனுபவிக்கிறேன்.
இப்போது சாகும் நிலையில் இருக்கிறேன்.+
நீங்கள் அனுமதிக்கிற பயங்கர வேதனைகளைச் சகித்து சகித்து எனக்கு மரத்தே போய்விட்டது.
16 சுட்டெரிக்கிற உங்கள் கோபம் என்னை வாட்டியெடுக்கிறது.+
நீங்கள் ஏற்படுத்தும் திகில் என்னைக் கொல்கிறது.