சங்கீதம்
பகுதி ஐந்து
(சங்கீதம் 107-150)
2 இதை யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் சொல்லட்டும்.
அவர்களை எதிரியிடமிருந்து அவர் மீட்டுக்கொண்டார்.+
3 மற்ற தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிச்சேர்த்தார்.+
கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும்
வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் கூட்டிச்சேர்த்தார்.+
4 வெறுமையான வனாந்தரத்தில் அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.
குடியிருப்பதற்கான நகரத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடினார்கள்.
5 பசியில் வாடினார்கள், தாகத்தில் தவித்தார்கள்.
சோர்வில் சுருண்டு விழும் நிலையில் இருந்தார்கள்.
6 வேதனை தாங்காமல் யெகோவாவிடம் கதறிக்கொண்டே இருந்தார்கள்.+
அவர்களை அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து அவர் காப்பாற்றினார்.+
7 சரியான வழியில் அவர்களை நடத்திக்கொண்டு போனார்.+
அவர்கள் குடியிருப்பதற்கான நகரத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்.+
8 மாறாத அன்பைக் காட்டியதற்காகவும்,
மனிதர்களுக்காக அற்புதங்களைச் செய்ததற்காகவும்+
மக்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லட்டும்.+
10 சிலர் பயங்கர இருட்டில் வாழ்ந்தார்கள்.
விலங்குகள் மாட்டப்பட்டு, கைதிகளாக அவதிப்பட்டார்கள்.
11 ஏனென்றால், கடவுளுடைய வார்த்தையை அவர்கள் மீறினார்கள்.
உன்னதமான கடவுளுடைய அறிவுரையை அவமதித்தார்கள்.+
12 அதனால், பாடுகளை அனுபவிக்க வைப்பதன் மூலம்
அவர்களுடைய இதயத்திலிருந்த ஆணவத்தைக் கடவுள் அடக்கினார்.+
அவர்கள் தடுமாறி விழுந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்ய யாருமே இருக்கவில்லை.
13 வேதனையில் தவித்தபோது உதவிக்காக யெகோவாவைக் கூப்பிட்டார்கள்.
அவர்களை அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து அவர் காப்பாற்றினார்.
15 மாறாத அன்பைக் காட்டியதற்காகவும்,+
மனிதர்களுக்காக அற்புதங்களைச் செய்ததற்காகவும்
மக்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லட்டும்.
17 அவர்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டார்கள்.+
தாங்கள் செய்த குற்றங்களுக்காகவும் அக்கிரமங்களுக்காகவும் கஷ்டத்தை அனுபவித்தார்கள்.+
18 அவர்களுக்கு எதையுமே சாப்பிடப் பிடிக்கவில்லை.
அவர்கள் மரண வாசலை நெருங்கினார்கள்.
19 வேதனையில் தவித்தபோது உதவிக்காக யெகோவாவைக் கூப்பிட்டார்கள்.
அவர்களை அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து அவர் காப்பாற்றினார்.
20 அவர் தன்னுடைய வார்த்தையை அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்.+
அவர்கள் விழுந்து கிடந்த குழிகளிலிருந்து அவர்களைத் தூக்கிவிட்டார்.
21 மாறாத அன்பைக் காட்டியதற்காகவும்,
மனிதர்களுக்காக அற்புதங்களைச் செய்ததற்காகவும்
மக்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லட்டும்.
23 கப்பலில் பயணம் செய்கிறவர்களும்,
பரந்து விரிந்த கடலில் வியாபாரம் செய்கிறவர்களும்,+
24 யெகோவாவின் செயல்களைப் பார்த்திருக்கிறார்கள்.
ஆழ்கடலில் அவர் செய்திருக்கிற அதிசயங்களைப் பார்த்திருக்கிறார்கள்.+
25 அவர் ஒரு வார்த்தை சொன்னதும் எப்படிப் புயல் அடிக்கிறதென்றும்,+
கடல் அலைகளை அது எப்படிப் பொங்கியெழ வைக்கிறதென்றும் பார்த்திருக்கிறார்கள்.
26 அலைகள் அவர்களை மேலே வானத்துக்கும்,
கீழே ஆழ்கடலுக்கும் அலைக்கழிக்கின்றன.
வரப்போகிற ஆபத்தை நினைத்து அவர்கள் வெலவெலத்துப்போகிறார்கள்.
27 குடிகாரர்கள்போல் தள்ளாடுகிறார்கள், தடுமாறுகிறார்கள்.
அவர்களுடைய திறமை எதுவுமே அவர்களுக்குக் கைகொடுப்பதில்லை.+
28 பின்பு, வேதனை தாங்காமல் யெகோவாவிடம் கதறுகிறார்கள்.+
அவர்களை அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து அவர் காப்பாற்றுகிறார்.
30 எல்லாம் அடங்கியதும் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
அவர்கள் போக விரும்பும் துறைமுகத்துக்கு அவர்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்.
31 மாறாத அன்பைக் காட்டியதற்காகவும்,
மனிதர்களுக்காக அற்புதங்களைச் செய்ததற்காகவும்
மக்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லட்டும்.+
33 ஆறுகளை அவர் பாலைவனம் போலாக்குகிறார்.
நீரூற்றுகளை வறண்ட நிலமாக்குகிறார்.+
34 வளமான நிலத்தைப் பயனில்லாத உப்பு நிலமாக்குகிறார்.+
ஏனென்றால், அங்கே குடியிருக்கிறவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள்.
35 அவர் பாலைவனத்தை நாணல்கள் நிறைந்த குளமாக மாற்றுகிறார்.
வறண்ட நிலத்தை நீரூற்றுகள் நிறைந்த இடமாக மாற்றுகிறார்.+
36 பசியில் வாடுகிறவர்களை அங்கே வாழ வைக்கிறார்.+
அவர்கள் குடியிருக்க ஒரு நகரத்தைக் கட்டும்படி செய்கிறார்.+
37 அவர்கள் வயல்களில் விதைக்கிறார்கள், திராட்சைத் தோட்டங்களைப் போடுகிறார்கள்.+
அவை அமோக விளைச்சலைத் தருகின்றன.+
38 அவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார், அவர்கள் ஏராளமாகப் பெருகுகிறார்கள்.
அவர்களுடைய கால்நடைகளும் குறையாதபடி அவர் பார்த்துக்கொள்கிறார்.+
39 ஆனால், திரும்பவும் அவர்களுடைய எண்ணிக்கை குறைகிறது, அவமானம் கூடுகிறது.
ஏனென்றால், அவர்கள் கொடுமையையும் துன்பத்தையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள்.
40 செல்வாக்கு உள்ளவர்களுக்கு மிகுந்த அவமானம் வரும்படி செய்கிறார்.
பாதையில்லாத பொட்டல் காடுகளில் அவர்களைத் திரிய வைக்கிறார்.+
41 ஆனால், அடக்கி ஒடுக்கப்படும் ஏழைகளைப் பாதுகாக்கிறார்.*+
அவர்களுடைய குடும்பங்களை மந்தைபோல் பெருக வைக்கிறார்.