சங்கீதம்
நெகிலோத்* இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம்.
2 என் கடவுளே, என் ராஜாவே, உதவிக்காக நான் கதறுவதைக் கேளுங்கள்.
ஏனென்றால், நான் உங்களிடம்தான் ஜெபம் செய்கிறேன்.
3 யெகோவாவே, காலையில் நீங்கள் என் குரலைக் கேட்பீர்கள்.+
என் கவலைகளைக் காலையில் உங்களிடம் கொட்டிவிட்டு,+ பதிலுக்காக ஆவலோடு காத்திருப்பேன்.
4 ஏனென்றால், நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல.+
கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.+
5 ஆணவம் பிடித்தவர்கள் யாரும் உங்கள் முன்னால் நிற்க முடியாது.
வன்முறையில் இறங்குகிறவர்களையும்* ஏமாற்றுக்காரர்களையும் யெகோவா அருவருக்கிறார்.+
7 நீங்கள் அளவுகடந்த அன்பை* காட்டுவதால்+ உங்கள் ஆலயத்துக்குள் வருவேன்.+
உங்கள்மேல் உள்ள பயபக்தியால் உங்கள் பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலைவணங்குவேன்.+
8 யெகோவாவே, எதிரிகள் என்னைச் சூழ்ந்திருப்பதால்,
உங்களுடைய நீதியான பாதையில் என்னை வழிநடத்துங்கள்.
உங்களுடைய வழியில் தடைகள் இல்லாமல் நடப்பதற்கு உதவி செய்யுங்கள்.+
9 அவர்கள் சொல்கிற எதையுமே நம்ப முடியாது.
அவர்களுக்கு உடம்பெல்லாம் விஷம்.*
அவர்களுடைய தொண்டை ஒரு திறந்த கல்லறை.
அவர்கள் தங்களுடைய நாவினால் போலியாகப் புகழ்கிறார்கள்.+
10 கடவுளே, நீங்கள் அவர்களைக் குற்றவாளிகள் என்று அறிவிப்பீர்கள்.
அவர்களுடைய சதித்திட்டங்களே அவர்களைப் படுகுழியில் தள்ளிவிடும்.+
அவர்கள் உங்களுக்கு அடங்கி நடக்காமல் நிறைய குற்றங்கள் செய்திருக்கிறார்கள்.
அதனால், அவர்களை விரட்டியடியுங்கள்.
11 உங்களிடம் தஞ்சம் அடைகிறவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.+
அவர்கள் எப்போதும் சந்தோஷத்தோடு உங்களைப் புகழ்ந்து பாடுவார்கள்.
அவர்களுக்குக் கெடுதல் செய்ய யாரையும் விட மாட்டீர்கள்.
உங்கள் பெயரை நேசிக்கிறவர்கள் உங்களை நினைத்து சந்தோஷப்படுவார்கள்.