2 சாமுவேல்
7 தாவீது ராஜா தன்னுடைய அரண்மனையில் குடியிருந்தார்.+ சுற்றியிருந்த எதிரிகள் எல்லாருடைய தொல்லையிலிருந்தும் விடுவித்து யெகோவா அவருக்கு நிம்மதி கொடுத்திருந்தார். 2 அப்போது அவர் நாத்தான்+ தீர்க்கதரிசியிடம், “பாருங்கள், தேவதாரு மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையில்* நான் குடியிருக்கிறேன்,+ ஆனால் உண்மைக் கடவுளின் பெட்டி சாதாரண கூடாரத்தில் இருக்கிறது”+ என்று சொன்னார். 3 அதற்கு நாத்தான், “நீங்கள் போய், உங்கள் மனதில் என்ன நினைத்திருக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள், யெகோவா உங்களுக்குத் துணையாக இருக்கிறார்”+ என்று சொன்னார்.
4 அன்று ராத்திரியே நாத்தானிடம் யெகோவா பேசினார். 5 “என் ஊழியன் தாவீதிடம் நீ போய், ‘யெகோவா சொல்வது என்னவென்றால்: “நான் குடியிருக்க ஒரு ஆலயத்தை நீ கட்டப்போகிறாயா?+ 6 இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த நாள்முதல் இந்த நாள்வரை நான் ஒரு ஆலயத்தில் குடியிருக்கவில்லையே.+ இடம்விட்டு இடம் மாற்றப்பட்ட கூடாரத்தில்தானே குடியிருந்தேன்?*+ 7 இவ்வளவு காலமாக இஸ்ரவேலர்களோடு இருந்தும், அவர்களை வழிநடத்துவதற்கு நான் நியமித்த கோத்திரத் தலைவர்கள் யாரிடமாவது, ‘ஏன் எனக்காக தேவதாரு மரத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டவில்லை?’ என்று ஒரு வார்த்தை கேட்டிருப்பேனா? என்று சொல்.”’ 8 அதோடு, நீ என் ஊழியன் தாவீதிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னைக்+ கூட்டிக்கொண்டு வந்து, என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக்கினேன்.+ 9 அதனால், நீ எங்கே போனாலும் நான் உனக்குத் துணையாக இருப்பேன்.+ உன் எதிரிகள் எல்லாரையும் ஒழித்துக்கட்டுவேன்.+ இந்தப் பூமியில் வாழ்ந்த மாமனிதர்களைப் போல் நீ பேரும் புகழும் பெறுவாய்.+ 10 என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களை ஒரே இடத்தில் குடியிருக்க வைப்பேன். அங்கே அவர்கள் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வார்கள். முன்பு கெட்டவர்கள் அவர்களை அடக்கி ஒடுக்கியதுபோல் இனிமேல் ஒடுக்க மாட்டார்கள்.+ 11 இஸ்ரவேலர்களுக்கு நான் நியாயாதிபதிகளை ஏற்படுத்திய காலத்தில்+ அடக்கி ஒடுக்கியதுபோல் அவர்களை ஒடுக்க மாட்டார்கள். உன் எதிரிகளின் தொல்லையில்லாமல் நீ நிம்மதியாக இருப்பாய்.+
அதோடு, யெகோவா உன் வம்சத்தை ராஜ வம்சமாக்குவார்* என்று யெகோவாவே உன்னிடம் சொல்லியிருக்கிறார்.+ 12 நீ இறந்து+ உன் முன்னோர்களைப் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட* பின்பு, உன் சந்ததியை, உன் சொந்த மகனை, ராஜாவாக ஏற்படுத்துவேன். அவனுடைய ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவேன்.+ 13 அவன்தான் என்னுடைய பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான்.+ அவனுடைய சிம்மாசனத்தை என்றென்றும் நிலைக்க வைப்பேன்.+ 14 நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்.+ தவறு செய்யும்போது அவனைக் கண்டிப்பேன்,* மனிதர்கள்* தண்டிப்பதுபோல் பிரம்பினால் தண்டிப்பேன்.+ 15 உன்னை ராஜாவாக்குவதற்காக சவுலை நீக்கினேன், அவனுக்கு மாறாத அன்பு காட்டுவதை நிறுத்திக்கொண்டது போல+ உனக்குச் செய்ய மாட்டேன். 16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார்.
17 தரிசனத்தில் சொல்லப்பட்ட இந்த எல்லா விஷயங்களையும் தாவீதிடம் நாத்தான் சொன்னார்.+
18 அதைக் கேட்டதும் தாவீது ராஜா உள்ளே போய் யெகோவாவுக்கு முன்னால் உட்கார்ந்து, “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, எனக்கும் என் வீட்டாருக்கும் என்ன தகுதி இருக்கிறது? என்னை இந்தளவு உயர்த்தியிருக்கிறீர்களே!+ 19 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இது போதாதென்று, உங்களுடைய ஊழியனின் வம்சம் காலம்காலமாக நிலைத்திருக்கும் என்றுகூட சொல்லியிருக்கிறீர்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இதை எந்த மனிதனாலும் மாற்ற முடியாது.* 20 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, என்னைப் பற்றித்தான் உங்களுக்கு நன்றாகத் தெரியுமே,+ அப்படியிருக்கும்போது உங்கள் ஊழியனாகிய நான் வேறென்ன சொல்ல முடியும்? 21 உங்கள் வார்த்தையையும் இதயத்திலிருந்த விருப்பத்தையும் நிறைவேற்ற இந்த மாபெரும் செயல்களைச் செய்திருக்கிறீர்கள்; அவற்றை இந்த அடியேனுக்கும் தெரிவித்திருக்கிறீர்கள்.+ 22 அதனால்தான், நீங்கள் மிகவும் உயர்ந்தவர்.+ உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, உங்களுக்குச் சமமானவர் யாருமில்லை.+ உங்களைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ நாங்கள் எங்களுடைய காதால் கேட்ட எல்லாவற்றையும் வைத்து இதை ஆணித்தரமாக நம்புகிறோம். 23 உங்களுடைய மக்களான இஸ்ரவேலர்களைப் போல் இந்த உலகத்தில் வேறெந்த மக்கள் இருக்கிறார்கள்?*+ தேவனே, இஸ்ரவேலர்களை உங்களுடைய சொந்த மக்களாக ஆக்குவதற்கென்று நீங்களே போய் அவர்களை விடுவித்து வந்தீர்களே,+ அற்புதங்களையும் பிரமிப்பூட்டும் செயல்களையும் செய்து+ உங்களுடைய பெயருக்குப் புகழ் சேர்த்தீர்களே.+ நீங்கள் எகிப்திலிருந்து விடுவித்த உங்கள் மக்களுக்காக, மற்ற தேசத்தாரை அவர்களுடைய தெய்வங்களோடு சேர்த்து விரட்டியடித்தீர்களே. 24 இஸ்ரவேலர்களை என்றென்றும் உங்களுடைய சொந்த மக்களாக ஆக்கினீர்கள்.+ யெகோவாவே, நீங்கள் அவர்களுடைய கடவுளாக ஆகியிருக்கிறீர்கள்.+
25 யெகோவா தேவனே, உங்களுடைய ஊழியனையும் அவனுடைய வம்சத்தையும் பற்றி நீங்கள் கொடுத்த வாக்கை என்றென்றும் நிறைவேற்றுங்கள்; நீங்கள் சொன்னபடியே செய்யுங்கள்.+ 26 உங்களுடைய பெயர் என்றென்றும் உயர்ந்தோங்கட்டும்;+ ‘பரலோகப் படைகளின் யெகோவாதான் இஸ்ரவேலின் கடவுள்’ என்று எல்லாரும் சொல்லட்டும். உங்களுடைய ஊழியனான தாவீதின் ராஜ வம்சம் உங்கள் முன்னால் எப்போதும் நிலைத்திருக்கட்டும்.+ 27 பரலோகப் படைகளின் யெகோவாவே, இஸ்ரவேலின் கடவுளே, ‘உன் வம்சத்தை ராஜ வம்சமாக்குவேன்’ என்று உங்களுடைய ஊழியனுக்குத் தெரியப்படுத்தினீர்களே.+ அந்தத் தைரியத்தில்தான் உங்களுடைய ஊழியனாகிய நான் இப்படி வேண்டிக்கொள்கிறேன். 28 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள்தான் உண்மையான கடவுள். உங்களுடைய வார்த்தைகளே உண்மையானவை.+ இந்த நல்ல விஷயங்களை உங்களுடைய ஊழியனுக்கு வாக்குறுதியாகக் கொடுத்ததும் நீங்கள்தான். 29 உங்கள் ஊழியனுடைய வம்சத்தைத் தயவுசெய்து ஆசீர்வதியுங்கள். அது உங்களுக்கு முன்னால் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.+ உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இப்படிச் செய்வதாக நீங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்; உங்களுடைய ஆசீர்வாதத்தால் உங்கள் ஊழியனுடைய வம்சம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கட்டும்!”+ என்று சொன்னார்.