சங்கீதம்
யெகோவாவின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள்.
யெகோவாவின் பெயரைப் புகழுங்கள்.
4 எல்லா தேசங்களுக்கும் மேலாக யெகோவா உயர்ந்திருக்கிறார்.+
அவருடைய மகிமை வானங்களுக்கும் மேலாக உயர்ந்திருக்கிறது.+
6 அவர் வானத்தையும் பூமியையும் குனிந்து பார்க்கிறார்.*+
7 எளியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்.
ஏழையைச் சாம்பல் குவியலிலிருந்து* உயர்த்துகிறார்.+
8 அவனை அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்.
தன்னுடைய மக்களின் அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்.
9 குழந்தையில்லாத பெண்ணுக்குக் குழந்தை பாக்கியத்தைத் தருகிறார்.
வீட்டில் குழந்தைகுட்டிகளோடு அவளைச் சந்தோஷமாக வாழ வைக்கிறார்.+
“யா”வைப் புகழுங்கள்!*