சங்கீதம்
பரலோகத்தில் இருப்பவர்களே, யெகோவாவைப் புகழுங்கள்.+
உயரத்தில் இருப்பவர்களே, அவரைப் புகழுங்கள்.
2 தேவதூதர்களே, நீங்கள் எல்லாரும் அவரைப் புகழுங்கள்.+
அவருடைய படைகளே, அவரைப் புகழுங்கள்.+
3 சூரியனே, சந்திரனே, அவரைப் புகழுங்கள்.
ஒளிவீசும் நட்சத்திரங்களே, அவரைப் புகழுங்கள்.+
4 வானாதி வானங்களே, அவரைப் புகழுங்கள்.
மழை மேகங்களே, அவரைப் புகழுங்கள்.
6 அவற்றை என்றென்றும் அவர் நிலைநிறுத்தியிருக்கிறார்.+
என்றும் அழியாத சட்டத்தை அவற்றுக்குக் கொடுத்திருக்கிறார்.+
7 பூமியில் இருப்பவர்களே, யெகோவாவைப் புகழுங்கள்.
ராட்சதக் கடல் பிராணிகளே, ஆழ்கடல்களே,
8 மின்னல்களே, ஆலங்கட்டிகளே,* பனித்துளிகளே, அடர்ந்த மேகங்களே,
அவருடைய கட்டளையை நிறைவேற்றுகிற புயல் காற்றே,+
கனி தரும் மரங்களே, தேவதாரு மரங்களே,+
10 காட்டு விலங்குகளே,+ வீட்டு விலங்குகளே,
ஊரும் பிராணிகளே, சிறகடிக்கும் பறவைகளே,
11 பூமியின் ராஜாக்களே, தேசங்களே,
பூமியின் தலைவர்களே, நீதிபதிகளே,+
12 இளம் ஆண்களே, இளம் பெண்களே,
பெரியவர்களே, சிறியவர்களே,
நீங்கள் எல்லாரும் கடவுளைப் புகழுங்கள்.
13 படைப்புகள் அனைத்தும் யெகோவாவின் பெயரைப் புகழட்டும்.
ஏனென்றால், அவருடைய பெயர் எட்ட முடியாதளவுக்கு உயர்ந்தது.+
அவருடைய மகத்துவம் வானத்தையும் பூமியையும்விட உயர்ந்தது.+
14 அவர் தனக்கு உண்மையாக* இருக்கிற ஜனத்தின் புகழுக்காக,
தனக்கு நெருக்கமாக இருக்கிற இஸ்ரவேலர்களின் புகழுக்காக,
அவர்களுடைய பலத்தைக் கூட்டுவார்.
“யா”வைப் புகழுங்கள்!*