சங்கீதம்
115 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,*
உங்களுடைய பெயருக்கே மகிமை சேரும்படி செய்யுங்கள்.+
ஏனென்றால், நீங்கள்தான் மாறாத அன்புள்ளவர், உண்மையுள்ளவர்.+
2 “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?” என்று
மற்ற தேசத்து மக்கள் ஏன் கேட்க வேண்டும்?+
3 நம்முடைய கடவுள் பரலோகத்தில் இருக்கிறார்.
எல்லாவற்றையும் தன்னுடைய விருப்பப்படியே செய்கிறார்.
5 அவற்றுக்கு வாய் இருக்கிறது, ஆனால் பேச முடியாது.+
கண்கள் இருக்கின்றன, ஆனால் பார்க்க முடியாது.
6 காதுகள் இருக்கின்றன, ஆனால் கேட்க முடியாது.
மூக்கு இருக்கிறது, ஆனால் முகர முடியாது.
7 கைகள் இருக்கின்றன, ஆனால் தொட்டு உணர முடியாது.
கால்கள் இருக்கின்றன, ஆனால் நடக்க முடியாது.+
அவற்றின் தொண்டையிலிருந்து எந்தச் சத்தமும் வராது.+
12 யெகோவா நம்மை ஞாபகத்தில் வைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.
இஸ்ரவேல் வம்சத்தாரை அவர் ஆசீர்வதிப்பார்.+
ஆரோன் வம்சத்தாரை அவர் ஆசீர்வதிப்பார்.
13 யெகோவா தனக்குப் பயந்து நடக்கிற எல்லாரையும் ஆசீர்வதிப்பார்.
சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரையும் ஆசீர்வதிப்பார்.
18 ஆனால், நாங்கள் இன்றும் என்றும்
“யா”வைப் புகழ்வோம்.
“யா”வைப் புகழுங்கள்!*