சங்கீதம்
137 பாபிலோனின் ஆறுகளுக்குப் பக்கத்தில்+ நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.
சீயோனை நினைத்து அழுதோம்.+
3 எங்களை அங்கே பிடித்துக்கொண்டு போனவர்கள் எங்களைப் பாட்டுப் பாடச் சொன்னார்கள்.+
அவர்களுக்குப் பொழுதுபோக வேண்டும் என்பதற்காக,
“சீயோனைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுங்கள்” என்று கேலியாகக் கேட்டார்கள்.
4 யெகோவாவின் பாட்டை அன்னிய மண்ணிலே
நாங்கள் எப்படிப் பாட முடியும்?
6 எருசலேமே, நான் உன்னை நினைக்காமல் போனால்,
எனக்கு எத்தனை பெரிய சந்தோஷங்கள் இருந்தாலும்,
உன்னை என் சந்தோஷத்தின் மகுடமாக நினைக்காமல் போனால்,+
என் நாக்கு மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளட்டும்.
7 யெகோவாவே, எருசலேம் வீழ்ச்சியடைந்தபோது ஏதோமியர்கள் சொன்னதை நினைத்துப் பாருங்கள்.
“அதை இடித்துப்போடுங்கள்! தரைமட்டமாக்குங்கள்!”+ என்று சொன்னார்களே.