சங்கீதம்
2 நான் வாய் திறந்து பழமொழி சொல்வேன்.
பூர்வ காலப் புதிர்களை விளக்குவேன்.+
3 எங்களுடைய முன்னோர்கள் எங்களுக்குச் சொன்ன விஷயங்களையும்,+
அவர்களிடம் நாங்கள் கேட்டுத் தெரிந்துகொண்ட விஷயங்களையும்,
4 அவர்களுடைய வம்சத்தாருக்கு மறைக்காமல் சொல்வோம்.
யெகோவாவின் அருமையான* செயல்களைப் பற்றியும்,
அவருடைய பலத்தைப் பற்றியும்,+ அவர் செய்த அற்புதங்களைப்+ பற்றியும்
வருங்காலத் தலைமுறைக்கு விளக்கிச் சொல்வோம்.+
5 யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர் ஒரு நினைப்பூட்டுதலைத் தந்தார்.
இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு சட்டத்தைக் கொடுத்தார்.
அவற்றைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டுமென்று
நம் முன்னோர்களுக்குக் கட்டளை கொடுத்தார்.+
6 ஏனென்றால், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளும் அவற்றைத் தெரிந்துகொண்டு,+
தங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டுமென்றும்,+
7 அந்தப் பிள்ளைகளும் கடவுள்மேல் நம்பிக்கை வைத்து,
8 அவர்களுடைய முன்னோர்களைப் போல ஆகாதிருக்க வேண்டுமென்றும் நினைத்தார்.
அவர்களுடைய முன்னோர்கள் பிடிவாதக்காரர்களாகவும் அடங்காதவர்களாகவும் இருந்தார்கள்.+
அந்தத் தலைமுறையின் உள்ளம் நிலையாக இருக்கவில்லை.+
அந்தத் தலைமுறை கடவுளுக்கு விசுவாசமாக இருக்கவில்லை.
9 எப்பிராயீம் வம்சத்தார் வில்வீரர்களாக இருந்தார்கள்.
ஆனாலும், போரில் பின்வாங்கினார்கள்.
10 கடவுளுடைய ஒப்பந்தத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.+
அவருடைய சட்டத்தின்படி நடக்கவில்லை.+
11 அவர் செய்த செயல்களை மறந்துவிட்டார்கள்.+
அவர் செய்து காட்டிய அற்புதங்களை நினைக்காமல் போனார்கள்.+
12 எகிப்து தேசத்திலே, சோவான் பகுதியிலே,+
அவர்களுடைய முன்னோர்களின் கண் முன்னால் அவர் அதிசயங்களைச் செய்தார்.+
14 பகலிலே மேகத்தினால் அவர்களுக்கு வழிகாட்டினார்.
ராத்திரி முழுவதும் நெருப்பின் வெளிச்சத்தினால் அவர்களை வழிநடத்தினார்.+
15 வனாந்தரத்தில் பாறைகளைப் பிளந்தார்.
நீரூற்றுபோல் பொங்கி வந்த தண்ணீரால் அவர்களுடைய தாகத்தைத் தீர்த்தார்.+
17 ஆனால், அவர்கள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்துகொண்டே இருந்தார்கள்.
பாலைவனத்தில் உன்னதமான கடவுளின் பேச்சை மீறிக்கொண்டே இருந்தார்கள்.+
18 தாங்கள் சாப்பிடத் துடித்த உணவைத் தரச்சொல்லிக் கேட்டு,
19 கடவுளுக்கு விரோதமாகப் பேசி,
“கடவுளால் இந்த வனாந்தரத்தில் நமக்குப் பந்தி போட முடியுமா?”+ என்று கேட்டார்கள்.
ஆனாலும், “அவரால் எங்களுக்கு உணவுகூட தர முடியுமா?
அவருடைய மக்களுக்கு இறைச்சி தர முடியுமா?” என்று கேட்டார்கள்.+
21 அதைக் கேட்டு யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+
யாக்கோபுக்கு எதிராக நெருப்பு+ மூண்டது.
இஸ்ரவேலுக்கு எதிராக அவருடைய கோபம் பற்றியெரிந்தது.+
22 ஏனென்றால், கடவுள்மேல் அவர்கள் விசுவாசம் வைக்கவில்லை.+
கடவுளால் தங்களைக் காப்பாற்ற முடியும் என்று நம்பவில்லை.
23 அதனால், மேகமூட்டமான வானத்துக்கு அவர் கட்டளை கொடுத்தார்.
வானத்தின் கதவுகளைத் திறந்தார்.
24 அவர்கள் சாப்பிடுவதற்காக மன்னாவை மழைபோல் பொழிந்துகொண்டே இருந்தார்.
வானத்தின் தானியத்தை அவர்களுக்குத் தந்தார்.+
27 இறைச்சியை மண் போல ஏராளமாகப் பொழிந்தார்.
கடற்கரை மணல்போல் எண்ணற்ற பறவைகளைத் தந்தார்.
28 அவருடைய முகாமின் நடுவில் அவற்றை விழ வைத்தார்.
அவருடைய கூடாரங்களைச் சுற்றிலும் விழ வைத்தார்.
30 ஆனால், அவர்களுடைய பேராசை அடங்குவதற்கு முன்பே,
அவர்களுடைய வாயில் அந்த இறைச்சி இருந்தபோதே,
அவர்களுடைய பலசாலிகளை அவர் கொன்றுபோட்டார்.+
இஸ்ரவேல் வாலிபர்களை வீழ்த்தினார்.
32 இவ்வளவு நடந்தும் அவர்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்தார்கள்.+
அவர் செய்த அற்புதங்களை நம்பாமல் போனார்கள்.+
33 அதனால், அவர்களுடைய வாழ்நாளை மூச்சுக்காற்றுபோல் அவர் மறைய வைத்தார்.+
அவர்களுடைய வாழ்நாள் காலத்தைத் திகில் சம்பவங்களால் திடீரென்று முடிவுக்குக் கொண்டுவந்தார்.
34 ஆனால், கடவுள் இப்படித் தண்டித்த ஒவ்வொரு சமயத்திலும்,
அவர்கள் அவரைத் தேட ஆரம்பித்தார்கள்.+
அவரிடம் திரும்பி வந்து, அவரையே நாடினார்கள்.
35 கடவுள்தான் தங்களுடைய கற்பாறை+ என்பதையும்,
உன்னதமான கடவுள்தான் தங்களை விடுவிக்கிறவர்*+ என்பதையும் நினைத்துப் பார்த்தார்கள்.
36 ஆனால், தங்களுடைய வாயினால் அவரை ஏமாற்றப் பார்த்தார்கள்.
தங்களுடைய நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.
37 அவர்களுடைய இதயம் அவரிடம் பற்றுதலாக இருக்கவில்லை.+
அவருடைய ஒப்பந்தத்துக்கு அவர்கள் உண்மையாக நடந்துகொள்ளவில்லை.+
38 இருந்தாலும், அவர் இரக்கம் காட்டினார்.+
அவர்களுடைய குற்றத்தை மன்னித்து, அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.+
அவர்கள்மேல் தன் கோபத்தையெல்லாம் கொட்டாமல்,
நிறைய தடவை அதை அடக்கிக்கொண்டார்.+
39 ஏனென்றால், அவர்கள் அற்ப மனுஷர்கள்தான்+ என்பதையும்,
திரும்பி வராத காற்றுதான்* என்பதையும் நினைத்துப் பார்த்தார்.
40 வனாந்தரத்தில் அவர்கள் எத்தனை தடவை அவருடைய பேச்சை மீறியிருப்பார்கள்!+
பாலைவனத்தில் எத்தனை தடவை அவருடைய மனதைப் புண்படுத்தியிருப்பார்கள்!+
41 அவர்கள் திரும்பத் திரும்பக் கடவுளைச் சோதித்தார்கள்.+
இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளைத் துக்கப்படுத்தினார்கள்.*
42 அவருடைய வல்லமையை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.
எதிரியிடமிருந்து அவர் தங்களைக் காப்பாற்றிய* நாளையும் நினைத்துப் பார்க்கவில்லை.+
43 அவர் எகிப்தில் அடையாளங்களையும்,+
சோவான் பிரதேசத்தில் அற்புதங்களையும் செய்தார்.
44 நைல் நதியின் கால்வாய்களை இரத்தமாக மாற்றினார்.+
நீரோடைகளின் தண்ணீரைக் குடிக்க முடியாதபடி செய்தார்.
45 அவர்களை ஒழிக்கும்படி கூட்டங்கூட்டமான கொடிய ஈக்களையும்,*+
அவர்களை அழிக்கும்படி தவளைகளையும் வர வைத்தார்.+
46 அகோரப் பசிகொண்ட வெட்டுக்கிளிகளுக்கு அவர்களுடைய பயிர்களை இரையாக்கினார்.
அவர்கள் பாடுபட்டு விளைய வைத்ததை வெட்டுக்கிளிக் கூட்டத்துக்கு உணவாகக் கொடுத்தார்.+
47 அவர்களுடைய திராட்சைக் கொடிகளை ஆலங்கட்டி* மழையால் அழித்தார்.+
அவர்களுடைய காட்டத்தி மரங்களை ஆலங்கட்டிகளால் சாய்த்தார்.
48 அவர்களுடைய சுமை சுமக்கும் விலங்குகளை ஆலங்கட்டி மழைக்குப் பலியாக்கினார்.+
அவர்களுடைய கால்நடைகளை மின்னல்களால்* தாக்கினார்.
49 பற்றியெரிகிற கோபத்தால் அவர்களைத் தண்டித்தார்.
கடும் கோபத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் வேதனைக்கும் அவர்களை ஆளாக்கினார்.
தன்னுடைய தூதர் படைகளை அனுப்பி அவர்களை அழித்தார்.
50 தன்னுடைய கோபத்துக்கு வடிகால் அமைத்தார்.
சாவின் பிடியில் அவர்களைச் சிக்க வைத்தார்.
கொள்ளைநோய்க்கு அவர்களைப் பலியாக்கினார்.
51 கடைசியில், எகிப்தியர்களின் முதல் பிறப்புகள் எல்லாவற்றையும் கொன்றுபோட்டார்.+
காமின் கூடாரங்களில் பிறந்த அவர்களுடைய முதல் மகன்களை* அழித்தார்.
52 பின்பு, தன்னுடைய மக்களை மந்தைபோல் அழைத்து வந்தார்.+
வனாந்தரத்தில் அவர்களை ஆடுகள்போல் வழிநடத்தி வந்தார்.
53 அவர்களைப் பத்திரமாகக் கூட்டிக்கொண்டு வந்தார்.
அவர்கள் எந்தப் பயமும் இல்லாமல் வந்தார்கள்.+
அவர்களுடைய எதிரிகளைக் கடல் மூழ்கடித்தது.+
54 அவர் தன்னுடைய பரிசுத்த தேசத்துக்கு அவர்களைக் கொண்டுவந்தார்.+
தன்னுடைய வலது கையால் வென்ற+ இந்த மலைப்பகுதிக்கு அவர்களை அழைத்துவந்தார்.
55 மற்ற தேசத்து மக்களை அவர்கள் முன்னாலிருந்து துரத்தியடித்தார்.+
தேசத்தை அளவுநூலால் அளந்து அவர்களுக்குப் பங்குபோட்டுக் கொடுத்தார்.+
இஸ்ரவேல் கோத்திரங்களை அவரவர் வீடுகளில் குடியேற்றினார்.+
56 ஆனாலும், அவர்கள் உன்னதமான கடவுளுக்கு எதிராகச் சவால் விட்டுக்கொண்டே* இருந்தார்கள்.
அவரை எதிர்த்துக்கொண்டே இருந்தார்கள்.+
57 அவர்களுடைய முன்னோர்களைப் போலவே கடவுளைவிட்டு விலகி, துரோகிகளாக மாறினார்கள்.+
உறுதியற்ற வில்லைப் போல அவர்கள் நம்ப முடியாதவர்களாக இருந்தார்கள்.+
58 தங்களுடைய ஆராதனை மேடுகளால் அவருடைய கோபத்தைக் கிளறிக்கொண்டே இருந்தார்கள்.+
தாங்கள் செதுக்கிய சிலைகளால் அவருக்கு எரிச்சல் மூட்டிக்கொண்டே இருந்தார்கள்.+
60 கடைசியில், சீலோவிலிருந்த வழிபாட்டுக் கூடாரத்தைக் கைவிட்டார்.+
மக்கள் மத்தியில் தான் குடிகொண்டிருந்த அந்தக் கூடாரத்தைவிட்டு விலகினார்.+
61 தன்னுடைய பலத்துக்கும் மேன்மைக்கும் அடையாளமாக இருந்த ஒப்பந்தப் பெட்டியை
எதிரிகள் கொண்டுபோவதற்கு விட்டுவிட்டார்.+
63 அவருடைய வாலிபர்கள் நெருப்பில் பலியானார்கள்.
அவருடைய கன்னிப் பெண்களுக்குக் கல்யாணப் பாடல்கள் பாடப்படவில்லை.*
64 அவருடைய குருமார்கள் வாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.+
விதவைகளாகிவிட்ட அவர்களுடைய மனைவிகள் அழுது புலம்பவில்லை.+
65 அப்போது, தூக்கத்திலிருந்து எழுவதுபோல் யெகோவா எழுந்தார்.+
திராட்சமதுவின் போதை தெளிந்து எழுகிற பலசாலிபோல்+ எழுந்தார்.
67 யோசேப்பின் கூடாரத்தை ஒதுக்கித்தள்ளினார்.
எப்பிராயீம் கோத்திரத்தைத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டார்.
68 அதற்குப் பதிலாக, யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்.+
அவர் நேசிக்கிற சீயோன் மலையைத் தேர்ந்தெடுத்தார்.+
69 அவருடைய ஆலயத்தை என்றென்றும் நிலைத்திருக்கிற வானத்தைப் போலவும்,+
என்றென்றும் இருக்கும்படி தான் நிலைநிறுத்திய பூமியைப் போலவும் அமைத்தார்.+