சங்கீதம்
ஆசாப்பின்+ சங்கீதம்.
79 கடவுளே, மற்ற தேசத்தார் உங்கள் தேசத்துக்குள் படையெடுத்து வந்தார்கள்.+
உங்களுடைய பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.+
எருசலேமை மண்மேடாக ஆக்கினார்கள்.+
2 உங்களுடைய ஊழியர்களின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாக்கினார்கள்.
உங்களுக்கு உண்மையாக* இருந்தவர்களின் உடலைக் காட்டு மிருகங்களுக்கு இரையாக்கினார்கள்.+
3 அவர்களுடைய இரத்தத்தை எருசலேம் முழுவதும் தண்ணீர்போல் ஊற்றினார்கள்.
அவர்களை அடக்கம் செய்ய ஒருவனும் இல்லை.+
4 அக்கம்பக்கத்து தேசங்களின் பழிப்பேச்சுக்கு நாங்கள் ஆளாகிவிட்டோம்.+
சுற்றியிருக்கிற மக்கள் எங்களைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்.
5 யெகோவாவே, இன்னும் எவ்வளவு காலம் கோபமாக இருப்பீர்கள்? என்றென்றைக்குமா?+
இன்னும் எவ்வளவு காலம் உங்களுடைய கோபம் தீயாய்ப் பற்றியெரியும்?+
6 உங்களைப் பற்றித் தெரியாத தேசங்களின் மேலும்,
உங்களுடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளாத ராஜ்யங்களின் மேலும்
உங்கள் கோபத்தைக் கொட்டுங்கள்.+
8 எங்களுடைய முன்னோர்கள் செய்த குற்றங்களுக்காக எங்களைத் தண்டிக்காதீர்கள்.+
நாங்கள் ரொம்பவே துவண்டுபோயிருக்கிறோம்.
எங்களுக்குச் சீக்கிரமாக இரக்கம் காட்டுங்கள்.+
உங்களுடைய மகிமையான பெயரை மனதில் வைத்து எங்களுக்கு உதவுங்கள்.
உங்கள் பெயரை மனதில் வைத்து எங்களைக் காப்பாற்றுங்கள்,
எங்கள் பாவங்களை மன்னியுங்கள்.+
10 “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?” என்று மற்ற தேசத்தார் ஏன் கேட்க வேண்டும்?+
உங்கள் ஊழியர்களைக் கொன்றவர்கள்* பழிவாங்கப்பட்டதை எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்ளட்டும்!
அது எங்கள் கண் முன்னால் நடக்கட்டும்!+
11 கைதியின் பெருமூச்சைக் கேளுங்கள்.+
மரணத் தீர்ப்பு பெற்றவர்களை உங்களுடைய மகா பலத்தால் காப்பாற்றுங்கள்.*+