சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; யெகோவாவின் ஊழியரான தாவீதின் பாடல்.
36 பொல்லாதவனுடைய இதயத்தின் ஆழத்திலே குற்றத்தின் குரல் கேட்கிறது.
அவனுக்குக் கடவுள்பயம் துளிகூட இல்லை.+
2 அவனுடைய கண்களில் அவன் பெரிய ஆளாக இருப்பதால்,
அவனுடைய குற்றத்தை அவனால் உணரவோ வெறுக்கவோ முடிவதில்லை.+
3 அவன் வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் புண்படுத்துகின்றன, ஏமாற்றுகின்றன.
நல்லது செய்வதற்குத் தேவையான விவேகம்* அவனிடம் இல்லை.
4 படுத்திருக்கும்போதுகூட அவன் சதித்திட்டங்களைத் தீட்டுகிறான்.
தவறான பாதையிலேயே போகிறான்.
கெட்ட விஷயங்களை ஒதுக்கித்தள்ளாமல் இருக்கிறான்.
5 யெகோவாவே, உங்களுடைய மாறாத அன்பு வானத்தைப் போல உயர்ந்தது.+
உங்களுடைய உண்மைத்தன்மை மேகங்களைப் போல உயர்ந்தது.
6 உங்களுடைய நீதி கம்பீரமான மலைகளை* போல இருக்கிறது.+
உங்களுடைய நீதித்தீர்ப்புகள் மாபெரும் ஆழ்கடலைப் போல இருக்கின்றன.+
யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் நீங்கள்தான் பாதுகாக்கிறீர்கள்.*+
7 கடவுளே, உங்களுடைய மாறாத அன்பு எவ்வளவு அருமையானது!+
உங்களுடைய சிறகுகளின் நிழலில் மக்கள் தஞ்சம் அடைகிறார்கள்.+
8 உங்கள் வீட்டில் கிடைக்கும் ஏராளமான நன்மைகளால்* அவர்கள் திருப்தியடைகிறார்கள்.+
நீங்கள் சந்தோஷத்தைப் பெருக்கெடுத்து ஓட வைத்து, அவர்களுடைய தாகத்தைத் தீர்க்கிறீர்கள்.+
10 உங்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு உங்களுடைய மாறாத அன்பை எப்போதும் காட்டுங்கள்.+
நேர்மையான நெஞ்சமுள்ளவர்களுக்கு உங்களுடைய நீதியை எப்போதும் காட்டுங்கள்.+
11 ஆணவமுள்ளவர்கள் என்னைக் காலில் போட்டு மிதிக்கும்படி விட்டுவிடாதீர்கள்,
பொல்லாதவர்கள் என்னை விரட்டியடிக்க விட்டுவிடாதீர்கள்.