ஏசாயா
66 யெகோவா சொல்வது இதுதான்:
“பரலோகம் என் சிம்மாசனம், பூமி என் கால்மணை.+
அப்படியிருக்கும்போது, எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட ஆலயத்தை* கட்டுவீர்கள்?+
நான் தங்குவதற்கு எப்படிப்பட்ட இடத்தைத் தருவீர்கள்?”+
“ஆனாலும், என் வார்த்தைக்குப் பயந்து நடக்கிற தாழ்மையுள்ள ஆட்களையும்,
மனமுடைந்த ஆட்களையும்தான் நான் கண்ணோக்கிப் பார்ப்பேன்.+
3 ஜனங்கள் காளையை வெட்டுவது ஒரு மனுஷனை வெட்டுவது போலவும்,+
ஒரு ஆட்டைப் பலி கொடுப்பது ஒரு நாயின் தலையை வெட்டுவது போலவும்,+
காணிக்கை கொடுப்பது பன்றியின் இரத்தத்தைக் கொடுப்பது போலவும்,+
சாம்பிராணியை எரிப்பது+ மாயமந்திர வார்த்தைகளால் துதிப்பது* போலவும் இருக்கிறது.+
எனக்கு அருவருப்பான காரியங்களை அவர்கள் ஆசையாய்ச் செய்கிறார்கள்.
அவரவர் விருப்பப்படி நடக்கிறார்கள்.
4 அதனால், என் விருப்பப்படி நான் அவர்களைத் தண்டிக்கப்போகிறேன்.+
அவர்கள் எதை நினைத்து நடுங்குகிறார்களோ அதையே அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.
ஏனென்றால், நான் கூப்பிட்டபோது அவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை.
நான் பேசியபோது யாரும் கேட்கவில்லை.+
நான் வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டே இருந்தார்கள்.
எனக்குப் பிடிக்காத வழியில் போனார்கள்.”+
5 யெகோவாவின் வார்த்தைக்குப் பயப்படுகிறவர்களே, அவர் சொல்வதைக் கேளுங்கள்:
“என் பெயரின் காரணமாக உங்களை வெறுத்து ஒதுக்குகிற உங்கள் சகோதரர்கள், ‘யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்!’ என்று போலித்தனமாகச் சொல்கிறார்கள்.+
ஆனால், நான் வந்து உங்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
அவர்களோ அவமானம் அடைவார்கள்.”+
6 நகரத்திலும் ஆலயத்திலும் ஒரே கூச்சல் சத்தம் கேட்கிறது.
யெகோவா அவருடைய எதிரிகளைப் பழிதீர்க்கும் சத்தம் அது.
7 சீயோன், பிரசவ நேரத்துக்கு முன்பே குழந்தையைப் பெற்றெடுத்தாள்.+
பிரசவ வலி வருவதற்கு முன்பே ஆண் குழந்தையைப் பெற்றாள்.
8 ஒரே நாளில் ஒரு தேசம் உருவாகுமா?
ஒரே நேரத்தில் ஒரு தேசத்து ஜனங்கள் பிறப்பார்களா?
இப்படிப்பட்ட ஒன்று நடந்ததாக யாராவது கேள்விப்பட்டது உண்டா?
இப்படிப்பட்ட ஒன்றை யாராவது பார்த்தது உண்டா?
ஆனால் சீயோன், பிரசவ வலி வந்தவுடனே மகன்களைப் பெற்றெடுத்தாள்.
9 “நான் பிரசவ வலியை வர வைத்துவிட்டு குழந்தை பிறக்காதபடி செய்வேனா?” என்று யெகோவா கேட்கிறார்.
“நான் ஆரம்பித்து வைத்த ஒன்றை முடிக்காமல் இருப்பேனா?” என்று உங்கள் கடவுள் கேட்கிறார்.
10 எருசலேமை நேசிக்கிறவர்களே,+ அவளோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்,+ அவளோடு சேர்ந்து ஆனந்தப்படுங்கள்.
அவளுக்காகத் துக்கப்படுகிறவர்களே, அவளோடு சேர்ந்து கொண்டாடி மகிழுங்கள்.
11 ஏனென்றால், குழந்தைக்கு வயிறார பாலூட்டும் தாய் போல எருசலேம் உங்களைக் கவனித்துக்கொள்வாள்.
நீங்கள் திருப்தியும் ஆறுதலும் அடைவீர்கள். அவளுடைய மகிமையைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுவீர்கள்.
12 யெகோவா சொல்வது இதுதான்:
“அவளுடைய சமாதானத்தை ஆறுபோல் பெருக்கெடுக்க வைப்பேன்.+
தேசங்களின் செல்வங்களை வெள்ளம்போல் அவளிடம் அடித்துவரச் செய்வேன்.+
நீங்கள் மடியில் வைத்துப் பாலூட்டப்படுவீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்.
முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.
13 ஒரு தாய் தன் மகனை ஆறுதல்படுத்துவது போல,
நான் உங்களை எப்போதும் ஆறுதல்படுத்துவேன்.+
எருசலேமின் நிலைமையைப் பார்த்து நீங்கள் ஆறுதல் அடைவீர்கள்.+
14 நீங்கள் அதைப் பார்த்து உள்ளம் பூரித்துப்போவீர்கள்.
புதிதாக முளைத்த புல்லைப் போல உங்கள் எலும்புகள் புது பலம் பெறும்.
யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய கைபலத்தைப் புரிந்துகொள்வார்கள்.
எதிரிகளோ அவருடைய கோபத்துக்கு ஆளாவார்கள்.”+
15 “யெகோவா நெருப்புபோல் வருவார்.+
அவருடைய ரதங்கள் புயல்காற்றைப் போல வரும்.+
அவர் கடும் கோபத்தோடு பழிவாங்குவார்.
கொழுந்துவிட்டு எரியும் தீயினால் தண்டிப்பார்.+
17 புனித* தோட்டங்களுக்கு* போவதற்காகத்+ தங்களைச் சுத்தப்படுத்தித் தூய்மையாக்குகிற ஆட்களும், பன்றியையும்+ எலியையும்+ அசுத்தமானவற்றையும் சாப்பிடுகிற ஆட்களும் ஒட்டுமொத்தமாக ஒழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். 18 “அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்றும், என்ன செய்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியும். அதனால், எல்லா தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்களை ஒன்றுதிரட்டுவதற்காக நான் வருகிறேன். அவர்கள் திரண்டு வந்து என் மகிமையைப் பார்ப்பார்கள்.”
19 “அவர்கள் மத்தியில் நான் ஒரு அடையாளத்தைச் செய்து காட்டுவேன். உயிர்தப்பியவர்களில் சிலரை வில்வீரர்கள் இருக்கிற தர்ஷீஸ்,+ பூல், லூத்+ தேசங்களுக்கும், தூபால், யாவான்+ தேசங்களுக்கும், தொலைதூரத்தில் உள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன். என்னைப் பற்றிக் கேள்விப்படாமலும், என் மகிமையைப் பார்க்காமலும் இருக்கிற அந்த ஜனங்களுக்கு அவர்கள் என் மகிமையைப் பற்றிச் சொல்வார்கள்.+ 20 பின்பு, எல்லா தேசங்களிலும் உள்ள உங்கள் சகோதரர்களை என் பரிசுத்த மலையாகிய எருசலேமுக்குக் குதிரைகளிலும், ரதங்களிலும், கூண்டு வண்டிகளிலும், கோவேறு கழுதைகளிலும்,* வேகமாக ஓடும் ஒட்டகங்களிலும் கூட்டிக்கொண்டு வருவார்கள்.+ இஸ்ரவேல் மக்கள் சுத்தமான பாத்திரத்தில் தங்கள் காணிக்கைகளை யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவது போல அவர்கள் உங்கள் சகோதரர்களை யெகோவாவுக்கு அன்பளிப்பாகக் கொண்டுவருவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
21 “அவர்களில் சிலரை குருமார்களாகவும் லேவியர்களாகவும் தேர்ந்தெடுப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
22 “நான் படைக்கிற புதிய வானமும் புதிய பூமியும்+ எப்படி என் முன்னால் என்றென்றும் நிலைத்திருக்குமோ அப்படியே உங்கள் வம்சமும் உங்கள் பெயரும் எப்போதும் நிலைத்திருக்கும்”+ என்று யெகோவா சொல்கிறார்.