ஏசாயா
15 மோவாபுக்கு எதிரான தீர்ப்பு:+
மோவாபின் ஆர் நகரம்+ ஒரே ராத்திரியில் அழிக்கப்படும்.
அதன் சத்தம் அடங்கிவிடும்.
மோவாபின் கீர் நகரம்+ ஒரே ராத்திரியில் அழிக்கப்படும்.
அதன் சத்தம் அடங்கிவிடும்.
2 கோயிலுக்கும் தீபோன் நகரத்துக்கும்+ ஜனங்கள் போவார்கள்.*
புலம்பி அழுவதற்காக ஆராதனை மேடுகளுக்கு ஏறிப் போவார்கள்.
நேபோ நகரத்துக்காகவும்+ மேதேபா ஊருக்காகவும்+ கதறி அழுவார்கள்.
எல்லாருமே தலையை மொட்டையடித்துக்கொள்வார்கள்,+ தாடியைச் சிரைத்துக்கொள்வார்கள்.+
3 தெருக்களில் துக்கத் துணி* போட்டுக்கொண்டு திரிவார்கள்.
பொது சதுக்கங்களுக்கும் மொட்டைமாடிகளுக்கும் போய் ஒப்பாரி வைப்பார்கள்.
அழுதுகொண்டே இறங்கி வருவார்கள்.+
அதைக் கேட்டு மோவாபின் வீரர்கள் அலறுவார்கள்.
பயந்து நடுங்குவார்கள்.
5 மோவாபை நினைத்து என் நெஞ்சம் துடிக்கும்.
அதன் ஜனங்கள் சோவார்+ வரைக்கும் எக்லாத்து-செலிசியா வரைக்கும் தப்பித்து ஓடுவார்கள்.+
கண்ணீரோடு லூகித் நகரத்துக்கு ஏறிப்போவார்கள்.
ஒரோனாயீமுக்குப் போகும் வழியிலே, தேசத்தின் அழிவைப் பார்த்து அலறுவார்கள்.+
6 நிம்ரீமின் தண்ணீர் வற்றிப்போகும்.
பசும்புல் கருகிப்போகும்.
புல்பூண்டுகள் எல்லாமே காய்ந்து காணாமல் போகும்.
7 அதனால் அவர்களுடைய சேமிப்புகளிலும் சொத்துகளிலும் மிச்சம் இருப்பதை எடுத்துக்கொண்டு போவார்கள்.
காட்டரசு மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கை* தாண்டிப் போவார்கள்.
8 மோவாப் தேசமெங்கும் கூக்குரல் கேட்கும்.+
எக்லாயிம் வரைக்கும் அலறல் சத்தம் எட்டும்.
பெயெர்-எலீம் வரைக்கும் அது எட்டும்.
9 திமோனின் தண்ணீர் இரத்தமாகும்.
திமோனுக்கு இன்னும் அதிக தண்டனை கொடுப்பேன்:
ஒரு சிங்கத்தை அனுப்புவேன்.
மோவாபில் மீதியாக இருக்கிறவர்களையும் தப்பித்து ஓடுகிறவர்களையும் அது கடித்துக் குதறும்.+