சங்கீதம்
தாவீதின் பாடல்.
28 யெகோவாவே, என் கற்பாறையே,+ நான் உங்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறேன்.
உங்கள் காதை அடைத்துக்கொள்ளாதீர்கள்.
2 உங்களுடைய ஆலயத்திலுள்ள மகா பரிசுத்த அறையைப் பார்த்தபடி கைகளை உயர்த்தி,
உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்.+
3 உள்ளத்தில் கெட்ட எண்ணத்தை வைத்துக்கொண்டு,
வெளியே சமாதானமாகப் பேசுகிற+ பொல்லாதவர்களோடும்
அக்கிரமக்காரர்களோடும்* சேர்த்து என்னைத் தண்டித்துவிடாதீர்கள்.+
அவர்களுடைய கைகள் செய்த குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை கொடுங்கள்.
சரிக்குச் சரிக்கட்டுங்கள்.+
அதனால் அவர் அவர்களைக் கவிழ்த்துப் போடுவார், கட்டியெழுப்ப மாட்டார்.
6 நான் யெகோவாவைப் புகழ்வேன்.
ஏனென்றால், உதவிக்காக நான் கெஞ்சியபோதெல்லாம் அவர் கேட்டார்.
அவர் எனக்கு உதவி செய்தார், அதனால் என் இதயம் சந்தோஷப்படுகிறது.
நான் அவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.
8 யெகோவாதான் தன்னுடைய மக்களுக்குப் பலம்.
அவர்தான் கோட்டை, தான் தேர்ந்தெடுத்தவரை* அற்புதமாக மீட்கிறவர்.+
9 கடவுளே, உங்களுடைய மக்களைக் காப்பாற்றுங்கள்; உங்களுடைய சொத்தை ஆசீர்வதியுங்கள்.+
அவர்களை மேய்த்து, உங்களுடைய கைகளில் என்றென்றும் சுமந்து செல்லுங்கள்.+