சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம்.
64 கடவுளே, நான் கெஞ்சும்போது கேளுங்கள்.+
எதிரியின் மிரட்டலுக்கு முடிவுகட்டி என் உயிரைக் காப்பாற்றுங்கள்.
2 பொல்லாதவர்களின் ரகசியத் திட்டங்களிலிருந்தும்,+
அக்கிரமக்காரர்களின் கும்பலிலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.
3 அவர்கள் தங்களுடைய நாவை வாள்போல் கூர்மையாக்குகிறார்கள்.
கொடூரமான வார்த்தைகளை அம்புகள்போல் குறிபார்த்து எறிகிறார்கள்.
4 மறைவான இடங்களிலிருந்து அப்பாவி மனிதனை அந்த அம்புகளால் தாக்குகிறார்கள்.
பயமே இல்லாமல் திடீரென்று அவனைத் தாக்குகிறார்கள்.
5 தங்களுடைய கெட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்.*
கண்ணிகளை எப்படி மறைத்து வைக்கலாம் என்று கலந்து பேசுகிறார்கள்.
“இவற்றை யாரும் பார்க்க மாட்டார்கள்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+
6 தவறுகள் செய்வதற்குப் புதுப்புது வழிகளைத் தேடுகிறார்கள்.
யாருக்கும் தெரியாமல் சாமர்த்தியமான திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.+
ஒவ்வொருவனுடைய உள்ளத்திலும் இருக்கிற யோசனையைக் கண்டுபிடிப்பது கஷ்டம்.
7 ஆனால், கடவுள் அவர்கள்மேல் அம்பு எறிவார்.+
எதிர்பார்க்காத நேரத்தில் அந்த அம்பு அவர்களைத் துளைக்கும்.
8 அவர்களுடைய நாவினாலேயே அவர்கள் சீரழிவார்கள்.+
அவர்களைப் பார்க்கிற எல்லாரும் அதிர்ச்சியில் தலையை ஆட்டுவார்கள்.