சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; கோராகுவின் மகன்களுடைய+ சங்கீதம்.
85 யெகோவாவே, உங்களுடைய தேசத்துக்குக் கருணை காட்டினீர்கள்.+
சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் வம்சத்தாரை அழைத்துவந்தீர்கள்.+
2 உங்களுடைய மக்கள் செய்த குற்றத்தை மன்னித்தீர்கள்.
அவர்கள் செய்த எல்லா பாவத்தையும் மன்னித்தீர்கள்.+ (சேலா)
4 எங்களை மீட்கும் கடவுளே, எங்களுக்குத் திரும்பவும் கருணை காட்டுங்கள்.*
எங்கள்மேல் இருக்கிற வெறுப்பை விட்டுவிடுங்கள்.+
5 நீங்கள் என்றென்றுமே எங்கள்மேல் கோபமாக இருப்பீர்களா?+
உங்கள் கோபம் தலைமுறை தலைமுறைக்கும் தீராதா?
6 உங்கள் ஜனங்களாகிய நாங்கள் உங்களை நினைத்து சந்தோஷப்படும்படி,
எங்களுக்கு மறுபடியும் புத்துயிர் தர மாட்டீர்களா?+
8 உண்மைக் கடவுளான யெகோவா சொல்வதை நான் கேட்பேன்.
உண்மையாக* நடக்கிற தன் மக்களுக்கு அவர் சமாதான வார்த்தைகளைச் சொல்வார்.+
ஆனால், அவர்கள் மறுபடியும் மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையோடு நடந்துகொள்ளாமல் இருக்கட்டும்!+
9 நம் தேசத்தில் அவருடைய மகிமை தங்கியிருப்பதற்காக,
அவருக்குப் பயந்து நடக்கிறவர்களை அவர் சீக்கிரத்திலேயே மீட்கப்போகிறார்.+