ஆமோஸ்
8 உன்னதப் பேரரசராகிய யெகோவா, கோடைக் காலத்துப் பழங்கள் உள்ள கூடை ஒன்றை எனக்குக் காட்டினார். 2 பின்பு அவர், “ஆமோஸ், நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “கோடைக் காலத்துப் பழங்கள் உள்ள ஒரு கூடையைப் பார்க்கிறேன்” என்றேன். அப்போது யெகோவா, “என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்கு முடிவு வந்துவிட்டது. இனி நான் அவர்களை மன்னிக்க மாட்டேன்.+ 3 ‘அந்த நாளிலே, ஆலயத்தில் பாட்டு சத்தத்துக்குப் பதிலாகப் புலம்பல் சத்தம் கேட்கும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். ‘எங்கு பார்த்தாலும் பிணங்கள் கிடக்கும்+—உஷ், அமைதி!’
4 ஏழைகளை மிதிப்பவர்களே,
தாழ்மையானவர்களை* அழிப்பவர்களே,+
5 நீங்கள், ‘மாதப் பிறப்பு* பண்டிகை எப்போது முடியும்?+ பயிர்களை விற்க வேண்டுமே,
ஓய்வுநாள்+ எப்போது முடியும்? தானியங்களை விற்பனை செய்ய வேண்டுமே,
அளவைக் குறைத்து, விலையை ஏற்றிவிடலாம்,
கள்ளத் தராசை வைத்து ஏமாற்றலாம்,+
6 வெள்ளியைக் கொடுத்து எளியவனை வாங்கலாம்,
ஒரு ஜோடி செருப்பைக் கொடுத்து ஏழையை வாங்கலாம்,+
மட்டமான தானியங்களை ஜனங்கள் தலையில் கட்டலாம்’ என்றெல்லாம் திட்டமிடுகிறீர்கள்.
இப்போது இதைக் கொஞ்சம் கேளுங்கள்.
7 யாக்கோபின் மகிமையாக* இருக்கும் யெகோவா,+ தன்மீதே சத்தியம் செய்து இப்படிச் சொல்லியிருக்கிறார்:
‘நான் அவர்களுடைய அக்கிரமங்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.+
அது எகிப்தின் நைல் நதிபோல் கொந்தளித்து,
அதே நைல் நதிபோல் அடங்கிவிடும்.’+
9 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
‘அந்த நாளிலே, நடுப்பகலில் சூரியனை மறையச் செய்வேன்.
பட்டப்பகலில் தேசத்தை இருட்டாக்குவேன்.+
எல்லாருடைய இடுப்பிலும் துக்கத் துணி* கட்டுவேன், எல்லாருடைய தலைகளையும் மொட்டையாக்குவேன்.
ஒரே மகனைப் பறிகொடுத்தவர்கள் கதறுவது போல எல்லாரையும் கதற வைப்பேன்.
அந்த நாளின் முடிவு படுசோகமாக இருக்கும்.’
11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
‘ஒரு காலம் வரப்போகிறது, அப்போது தேசத்தில் பஞ்சத்தைக் கொண்டுவருவேன்.
அது உணவு கிடைக்காத பஞ்சமோ தண்ணீர் கிடைக்காத பஞ்சமோ இல்லை.
அது யெகோவாவின் வார்த்தை கிடைக்காத பஞ்சம்.+
12 அப்போது, அவர்கள் ஒரு கடலிலிருந்து இன்னொரு கடலுக்குத் தள்ளாடிக்கொண்டு போவார்கள்.
வடக்கிலிருந்து கிழக்குக்குத் தடுமாறிக்கொண்டு போவார்கள்.
யெகோவாவின் வார்த்தையைத் தேடி அலைவார்கள், ஆனால் கண்டுபிடிக்க மாட்டார்கள்.
13 அந்த நாளில், அழகான கன்னிப் பெண்களும் இளம் ஆண்களும்
தாகத்தால் சுருண்டு விழுவார்கள்.
14 அவர்கள் சமாரியாவின் பொய்க் கடவுள்கள்மேல்* சத்தியம் செய்கிறார்கள்.+
“தாண் நகரமே,+ உன் கடவுள்மேல் சத்தியம்!” என்றும்,
“பெயெர்-செபாவின்+ பாதைமேல் சத்தியம்!” என்றும் சொல்கிறார்கள்.
அவர்கள் விழுவார்கள், எழுந்திருக்கவே மாட்டார்கள்.’”+