ஏசாயா
“பயப்படாதே, நான் உன்னை விடுவித்திருக்கிறேன்.+
உன் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறேன்.
நீ எனக்குச் சொந்தமானவன்.
2 நீ கடலைக் கடந்து போகிறபோது நான் உன்னோடு இருப்பேன்.+
ஆற்றைக் கடந்து போகிறபோது அது உன்னை மூழ்கடிக்காது.+
நெருப்பில் நடந்தாலும் அது உன்னைச் சுட்டெரிக்காது.
தீ ஜுவாலை உன்மேல் பட்டாலும் அது உன்னைப் பொசுக்காது.
3 ஏனென்றால், நான் உன் கடவுளாகிய யெகோவா, உன் மீட்பர்.
நான் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுள்.
எகிப்தையும் எத்தியோப்பியாவையும் சிபாவையும் மீட்புவிலையாகக் கொடுத்து
உன்னை மீட்டுக்கொண்டேன்.
அதனால், தேசங்களையும் ஜனங்களையும் மீட்புவிலையாகக் கொடுத்து
உன் உயிரைக் காப்பாற்றுவேன்.
5 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+
உன்னுடைய சந்ததியை கிழக்கிலிருந்து கொண்டுவருவேன்.
மேற்கிலிருந்து உன்னைக் கூட்டிச்சேர்ப்பேன்.+
6 நான் வடக்கைப் பார்த்து, ‘அவர்களைத் திருப்பி அனுப்பு!’ என்று சொல்வேன்.+
தெற்கைப் பார்த்து, ‘அவர்களைப் பிடித்து வைக்காதே.
தூரத்தில் இருக்கிற என் மகன்களையும்
பூமியின் எல்லைகளில் இருக்கிற என் மகள்களையும் கூட்டிக்கொண்டு வா.+
7 என்னுடைய மகிமைக்காக நான் படைத்தவர்களை,
என் கையால் உண்டாக்கினவர்களை,+
என் பெயரால் அழைக்கப்படுகிற ஜனங்களைக்+ கூட்டிக்கொண்டு வா’ என்று சொல்வேன்.
அவர்களில் யாராவது* எதிர்காலத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா?
ஆரம்ப சம்பவங்களை* யாராவது முன்கூட்டியே சொல்ல முடியுமா?+
அப்படிச் சொல்வதாக இருந்தால் அது உண்மை என்று நிரூபிக்க சாட்சிகளைக் கூட்டிக்கொண்டு வரட்டும்.
மற்றவர்களும் அதைக் கேட்டு, ‘இது உண்மைதான்’ என்று சொல்லட்டும்.”+
10 யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்கிறீர்கள்.+
என்னைப் பற்றித் தெரிந்துகொண்டு என்மேல் விசுவாசம்* வைப்பதற்கும்,
நான் மாறாதவர் என்று புரிந்துகொள்வதற்கும்+
நான் தேர்ந்தெடுத்திருக்கிற என் ஊழியனே,+
நீ என்னுடைய சாட்சியாக இருக்கிறாய்.
எனக்கு முன்பும் சரி எனக்குப் பின்பும் சரி,
எந்தக் கடவுளும் இருந்ததில்லை.+
11 நான் யெகோவா,+ என்னைத் தவிர வேறு மீட்பர் இல்லை.”+
12 யெகோவா சொல்வது இதுதான்: “பொய் தெய்வங்களை நீங்கள் கும்பிடாமல் இருந்த சமயங்களில் நான் உங்களைக் காப்பாற்றினேன்.+
அப்படிக் காப்பாற்றப்போவதாக முன்கூட்டியே சொன்னேன், அதைச் செய்தேன், அதை எல்லாருக்கும் தெரியப்படுத்தினேன்.
நான்தான் கடவுள் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள்.+
நான் செய்வதை யாராலும் தடுக்க முடியாது.”+
14 உன்னை விடுவிக்கிறவரும்+ இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளுமான யெகோவா+ சொல்வது இதுதான்:
“உங்களுக்காக நான் பாபிலோனுக்கு ஆட்களை அனுப்பி, அதன் தாழ்ப்பாள்கள் எல்லாவற்றையும் உடைத்துப்போடுவேன்.+
கப்பலில் போகிற கல்தேயர்கள் அலறுவார்கள்.+
15 நான் யெகோவா, உங்களுடைய பரிசுத்தமான கடவுளும்+ இஸ்ரவேலை உருவாக்கினவரும்,+ உங்களுடைய ராஜாவும் நான்தான்.”+
16 யெகோவா கடலைப் பிளந்தவர்.
கரைபுரண்டு ஓடுகிற ஆற்றை வற்ற வைத்தவர்.
அவற்றைக் கடப்பதற்காக வழியை உண்டாக்கியவர்.+
17 போர் ரதங்களையும் குதிரைகளையும் வர வைத்தவர்.+
பலம்படைத்த வீரர்களின் படையை வர வைத்தவர்.
அவர் சொல்வது இதுதான்: “அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி விழுந்துகிடப்பார்கள்.+
எரிகிற திரியை அணைப்பதுபோல் அவர்களை நான் அழித்துவிடுவேன்.”
18 “முன்பு நடந்ததை மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள்.
அதைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டு இருக்காதீர்கள்.
19 இப்போது, நான் புதிதாக என்ன செய்யப்போகிறேன் என்று பாருங்கள்.+
அதை ஏற்கெனவே செய்ய ஆரம்பித்துவிட்டேன்.
அது உங்களுக்குத் தெரியவில்லையா?
20 நான் தேர்ந்தெடுத்த என் ஜனங்கள்+ குடிப்பதற்காக
வனாந்தரத்தில் தண்ணீரை வர வைப்பேன்.
பாலைவனத்தில் ஆறுகளை ஓட வைப்பேன்.+
அதனால் நரிகளும் நெருப்புக்கோழிகளும்,
கொடிய மிருகங்களும்கூட என்னைப் புகழும்.
21 என் ஜனங்களை எனக்காகப் படைத்தேன்.
அவர்கள் என் புகழைப் பரப்ப வேண்டும் என்பதற்காக அவர்களை உருவாக்கினேன்.+
22 ஆனால் யாக்கோபே, இஸ்ரவேலே, நீ உதவிக்காக என்னைக் கூப்பிடவில்லை.+
ஏனென்றால், என்னை வணங்குவதே உனக்குச் சலிப்பாகிவிட்டது.+
23 தகன பலி கொடுப்பதற்காகச் செம்மறியாடுகளை நீ கொண்டுவரவில்லை.
பலிகளைக் கொடுத்து என்னை மகிமைப்படுத்தவில்லை.
எனக்குக் காணிக்கை கொண்டுவரச் சொல்லி உன்னை நான் கட்டாயப்படுத்தவில்லையே.
சாம்பிராணி கொண்டுவரச் சொல்லி உன்னை வற்புறுத்தவில்லையே.+
24 எனக்காக நீ பணம் செலவழித்து வாசனையான வசம்பை வாங்கி வரவில்லை.
உன்னுடைய பலிகளின் கொழுப்பைக் கொடுத்து என்னைச் சந்தோஷப்படுத்தவில்லை.+
அதற்குப் பதிலாக, நீ பாவத்துக்குமேல் பாவம்தான் செய்திருக்கிறாய்.
அதையெல்லாம் பார்த்து எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.+
25 நீ செய்த குற்றத்தையெல்லாம் துடைத்து அழிக்கிறவர் நான்தான்;+ என்னுடைய பெயருக்காகத்தான் இதைச் செய்கிறேன்.+
நீ செய்த பாவத்தையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டிருக்க மாட்டேன்.+
26 வா, நாம் ஒருவரோடு ஒருவர் வழக்காடலாம்; எனக்கு ஞாபகப்படுத்து.
உன் பக்கம் நியாயம் இருந்தால் அதை நிரூபித்துக் காட்டு.