புலம்பல்
א [ஆலெஃப்]
4 ஐயோ! பளபளப்பான சொக்கத்தங்கம் இப்படி மங்கிப்போனதே!+
பரிசுத்த இடத்தின் கற்கள்+ தெரு முனைகளில் இப்படிச் சிதறிக் கிடக்கிறதே!+
ב [பேத்]
2 சொக்கத்தங்கம் போன்ற சீயோனின் மகன்கள்
குயவனின் கைவேலைப்பாடான மண்ஜாடிகளைப் போல ஆகிவிட்டார்களே!
ג [கீமெல்]
3 நரிகள்கூட குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்.
ஆனால், என் மகளாக இருக்கும் மக்கள் வனாந்தரத்திலுள்ள நெருப்புக்கோழிகள்+ போலக் கொடூரமாக நடந்துகொள்கிறார்கள்.+
ד [டாலத்]
4 பால் குடிக்கும் குழந்தையின் நாக்கு வறண்டுபோய் மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது.
பிள்ளைகள் உணவுக்காகக் கெஞ்சுகிறார்கள்,+ ஆனால் யாரும் எதுவும் கொடுப்பதில்லை.+
ה [ஹே]
5 விதவிதமான உணவு சாப்பிட்டவர்கள் பஞ்சத்தில் அடிபட்டு தெருக்களில் கிடக்கிறார்கள்.+
விலை உயர்ந்த துணிமணிகளை உடுத்தி வளர்ந்தவர்கள்+ குப்பைமேட்டில் கிடக்கிறார்கள்.
ו [வா]
6 உதவி செய்ய யாரும் இல்லாமல் ஒரே நொடியில் அழிக்கப்பட்ட சோதோமைவிட+
என் ஜனங்கள் பெரிய தண்டனையை அனுபவித்துவிட்டார்கள்.+
ז [ஸாயின்]
7 அவர்களுடைய நசரேயர்கள்+ பனியைவிட தூய்மையாகவும் பாலைவிட வெண்மையாகவும் இருந்தார்கள்.
பவளங்களைவிட சிவப்பாக இருந்தார்கள்; நீலமணிக்கற்களைப் போலப் பளபளப்பாக இருந்தார்கள்.
ח [ஹேத்]
8 ஆனால், இப்போது கரியைவிட கறுப்பாகிவிட்டார்கள்.
தெருக்களில் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை.
அவர்களுடைய தோல் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டது,+ காய்ந்த மரத்தைப் போல ஆகிவிட்டது.
ט [டேத்]
י [யோத்]
10 என் ஜனங்களுக்கு அழிவு வந்தபோது
பாசமான தாய்கள்கூட தங்களுடைய குழந்தைகளை வேக வைத்துத் தின்றார்கள்.+
כ [காஃப்]
சீயோனில் நெருப்பு மூட்டினார்; அது அவளுடைய அஸ்திவாரங்களைப் பொசுக்கியது.+
ל [லாமெத்]
12 எதிரிகள் எருசலேமின் நுழைவாசலுக்குள் புகுந்துவிட்டார்கள்.+
உலகத்திலுள்ள எந்த ராஜாவும் ஜனமும் இதை எதிர்பார்க்கவே இல்லை.
מ [மேம்]
13 தீர்க்கதரிசிகளும் குருமார்களும் செய்த பாவங்களால்தான் இந்தக் கதி!+
அவர்கள் நீதிமான்களின் இரத்தத்தை அங்கே சிந்தினார்கள்.+
נ [நூன்]
14 தீர்க்கதரிசிகளும் குருமார்களும் குருடர்களைப் போலத் தெருக்களில் அலைந்து திரிந்தார்கள்.+
அவர்களுடைய துணிகளில் இரத்தக் கறை படிந்திருக்கிறது.+
யாரும் அந்தத் துணிகளைத் தொடுவதற்குத் துணிவதில்லை.
ס [சாமெக்]
15 அவர்கள் வீடுவாசலைப் பறிகொடுத்துவிட்டு அலைகிறார்கள்.
ஜனங்கள் அவர்களைப் பார்த்து, “பக்கத்தில் வராதீர்கள்! நீங்கள் தீட்டுப்பட்டவர்கள்!” என்று கத்துகிறார்கள்.
“போய்விடுங்கள்! போய்விடுங்கள்! எங்களைத் தொடாதீர்கள்!” என்று அலறுகிறார்கள்.
மற்ற தேசத்து ஜனங்களும், “அவர்கள் நம்மோடு வாழக் கூடாது” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்கள்.+
פ [பே]*
இனி யாரும் இந்தக் குருமார்களையும் பெரியோர்களையும்* மதிக்க மாட்டார்கள்”+ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
ע [ஆயின்]
17 உதவி கிடைக்குமென்று எதிர்பார்த்து எதிர்பார்த்து எங்கள் கண்கள் பூத்துப்போயின.+
எங்களைக் காப்பாற்ற முடியாத தேசத்துக்காகக் காத்திருந்து காத்திருந்து சோர்ந்துபோனோம்.+
צ [சாதே]
18 எதிரிகள் எங்களை வேட்டையாடுகிறார்கள்;+ அதனால், பொது சதுக்கங்களில் எங்களால் நடந்துபோக முடியவில்லை.
இனி எங்கள் கதி அவ்வளவுதான்! எங்களுக்கு அழிவு நெருங்கிவிட்டது! எங்களுடைய காலம் முடிந்துவிட்டது!
ק [கோஃப்]
19 எதிரிகள் கழுகுகளைவிட வேகமாக எங்கள்மேல் பாய்ந்தார்கள்.+
மலைகளில் எங்களைத் துரத்தினார்கள்; வனாந்தரத்தில் பதுங்கியிருந்து தாக்கினார்கள்.
ר [ரேஷ்]
20 யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை+ அவர்கள் பிடித்துவிட்டார்கள்; எங்களுக்கு உயிர்மூச்சாக இருந்தவரைப் படுகுழியில் விழ வைத்தார்கள்.+
“மற்ற தேசத்தாரின் நடுவே அவருடைய நிழலில் வாழ்வோம்” என்று நாங்கள் நம்பியிருந்தோமே!
ש [ஸீன்]
21 ஊத்ஸ் தேசத்தில் வாழ்கிற ஏதோம் மகளே, சந்தோஷமாக ஆடிப் பாடு!+
உன்னிடமும் கிண்ணம் கொடுக்கப்படும்;+ நீ போதை ஏறுமளவுக்குக் குடித்து, ஆபாசமாகக் கிடப்பாய்.+
ת [ட்டா]
22 சீயோன் மகளே, உன்னுடைய தண்டனை முடிந்துவிட்டது.
அவர் மறுபடியும் உன்னைச் சிறைபிடிக்கப்பட்டுப் போவதற்கு விடமாட்டார்.+
ஆனால் ஏதோம் மகளே, அவர் உன்னுடைய அக்கிரமங்களைக் கணக்கெடுப்பார்.
உன்னுடைய பாவங்களை அம்பலமாக்குவார்.+