சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; எதித்தூன்.* தாவீதின் சங்கீதம்.
62 நான் கடவுளுக்காக அமைதியாய்க் காத்திருக்கிறேன்.
அவர்தான் என்னை மீட்பார்.+
3 ஒருவனைக் கொல்வதற்காக எவ்வளவு காலம்தான் அவனைத் தாக்கிக்கொண்டே இருப்பீர்கள்?+
விழும் நிலையிலிருக்கிற சாய்ந்த கற்சுவர் போல நீங்கள் எல்லாரும் ஆபத்தானவர்களாக இருக்கிறீர்கள்.*
4 அவனை உயர்ந்த* நிலையிலிருந்து தள்ளுவதற்காக அவர்கள் ஒன்றுகூடி திட்டம் போடுகிறார்கள்.
பொய் பேசுவதில் சந்தோஷப்படுகிறார்கள்.
தங்கள் வாயால் ஆசீர்வதிக்கிறார்கள், ஆனால் தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள்.+ (சேலா)
7 என் மீட்பும் மகிமையும் கடவுள் கையில்தான் இருக்கின்றன.
கடவுள்தான் என்னுடைய பலமான கற்பாறை, என் அடைக்கலம்.+
8 ஜனங்களே, எப்போதும் அவர்மேல் நம்பிக்கை வையுங்கள்.
உங்களுடைய இதயத்தில் இருப்பதையெல்லாம் அவர்முன் ஊற்றிவிடுங்கள்.+
கடவுள்தான் நமக்குத் தஞ்சம்.+ (சேலா)
அவர்கள் எல்லாரையும் தராசில் நிற்க வைத்தால்,
மூச்சுக்காற்றைவிட லேசாகத்தான் இருப்பார்கள்.+
10 அடுத்தவர் பணத்தைப் பறித்து நன்றாக வாழலாம் என்று நினைக்காதீர்கள்.
திருட்டுத் தொழிலில் வீணாக நம்பிக்கை வைக்காதீர்கள்.
உங்கள் செல்வம் பெருகும்போது, அதன் மேலேயே உங்கள் கவனத்தை* வைக்காதீர்கள்.+
இதைக் கடவுளே சொன்னார், நான் இரண்டு தடவை கேட்டேன்.