நீதிமொழிகள்
30 யாக்கே என்பவரின் மகன் ஆகூர், இத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன முக்கியமான விஷயங்கள்.
2 மற்ற யாரையும்விட நான்தான் எதுவும் தெரியாதவனாக இருக்கிறேன்.+
மனிதர்களுக்கு இருக்க வேண்டிய புத்தி* எனக்கு இல்லை.
3 நான் ஞானத்தைக் கற்றுக்கொள்ளவில்லை.
மகா பரிசுத்தமானவரைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.
4 வானத்துக்கு ஏறி இறங்கியவர் யார்?+
காற்றைத் தன் இரண்டு கைகளிலும் பிடித்தவர் யார்?
தண்ணீரைத் தன் உடையில் கட்டிவைத்தவர் யார்?+
பூமியின் எல்லைகளையெல்லாம் குறித்தவர் யார்?+
அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனின் பெயர் என்ன? உனக்குத் தெரியுமா?
5 கடவுளுடைய ஒவ்வொரு வார்த்தையும் புடமிடப்பட்டது.+
அவரிடம் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அவர் ஒரு கேடயம்.+
6 அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் சேர்க்காதே.+
அப்படிச் சேர்த்தால் அவர் உன்னைக் கண்டிப்பார்.
நீ ஒரு பொய்யன் என்பது நிரூபணமாகும்.
7 கடவுளே, நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்
எனக்காக இரண்டு காரியங்களை நீங்கள் செய்ய வேண்டும்.
8 பொய் புரட்டை என்னைவிட்டுத் தூரமாக நீக்கிவிடுங்கள்.+
எனக்கு வறுமையையோ அதிக செல்வத்தையோ கொடுக்காமல்,
தேவையான அளவு உணவு மட்டும் கொடுங்கள்.+
9 ஏனென்றால், எல்லா வசதிகளும் கிடைத்த திருப்தியில், “யார் அந்த யெகோவா?” என்று நான் கேட்டுவிடக் கூடாது.+
அதேபோல், வறுமையால் திருடனாக மாறி, உங்களுடைய பெயரைக் களங்கப்படுத்திவிடக் கூடாது.
10 வேலைக்காரனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எஜமானிடம் சொல்லாதே.
அப்படிச் சொன்னால், அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாக ஆகிவிடுவாய்.+
14 வாள் போன்ற பற்களையும்
வெட்டுக்கத்தி போன்ற தாடைகளையும் கொண்ட தலைமுறையும் உண்டு.
அது உலகத்திலுள்ள ஏழை எளியவர்களை விழுங்குகிறது.+
15 “கொடு! கொடு!” என்று கத்துகிற இரண்டு மகள்கள் அட்டைப்பூச்சிகளுக்கு உண்டு.
திருப்தியே அடையாத மூன்று காரியங்கள் உண்டு.
“போதும்!” என்று ஒருபோதும் சொல்லாத நான்கு காரியங்கள் உண்டு.
17 ஒருவன் தன் அப்பாவை ஏளனம் செய்து, அம்மாவின் பேச்சை மதிக்காமல் போனால்,+
அவனுடைய கண்களைப் பள்ளத்தாக்கில் திரிகிற அண்டங்காக்கைகள் கொத்தி எடுக்கும்,
இளம் கழுகுகள் அவற்றைத் தின்றுவிடும்.+
18 என்னுடைய அறிவுக்கு எட்டாத* மூன்று விஷயங்கள் இருக்கின்றன.
எனக்குப் புரியாத நான்கு விஷயங்கள் இருக்கின்றன.
19 அவை: வானத்தில் பறக்கிற கழுகின் வழி,
பாறையில் ஊர்ந்துபோகிற பாம்பின் வழி,
கடலில் மிதந்துசெல்கிற கப்பலின் வழி,
இளம் பெண்ணோடு பழகுகிற ஆணின் வழி.
20 கணவனுக்குத் துரோகம் செய்கிற பெண்ணின் வழி இதுதான்:
அவள் சாப்பிட்டுவிட்டு, வாயைத் துடைத்துக்கொள்கிறாள்.
பின்பு, “நான் எந்தத் தப்பும் செய்யவில்லை” என்று சொல்கிறாள்.+
21 இந்தப் பூமியையே அதிர வைக்கிற மூன்று விஷயங்கள் இருக்கின்றன.
இந்தப் பூமியால் தாங்க முடியாத நான்கு விஷயங்கள் இருக்கின்றன.
22 அவை: ஓர் அடிமை அரசனாக ஆட்சி செய்வது,+
ஒரு முட்டாள் வயிறுமுட்ட சாப்பிடுவது,
23 வெறுக்கப்பட்ட* பெண் ஒருவனுக்கு மனைவியாவது,
எஜமானியின் இடத்தை வேலைக்காரி பிடித்துக்கொள்வது.+
29 கம்பீரமாய் நடக்கிற மூன்று உண்டு.
வீறுநடை போடுகிற நான்கு உண்டு.
30 அவை: விலங்குகளிலேயே மகா பலம்படைத்ததும்,
யாரைக் கண்டும் பயந்து ஓடாததுமான சிங்கம்;+
31 வேட்டை நாய்; வெள்ளாட்டுக் கடா;
ராஜாவின் தலைமையில் போகும் படை.