மீகா
7 என் நிலைமை ரொம்பப் பரிதாபமாக இருக்கிறது.
கோடைக் காலத்துப் பழங்களின் அறுவடை முடிந்தது.
திராட்சை அறுவடையும் முடிந்துவிட்டது.
ஆனால், சாப்பிட எனக்கு ஒரு திராட்சைக் கொத்துகூட இல்லை.
எனக்குப் பிடித்த ருசியான அத்திப் பழமும் இல்லை.
பதுங்கியிருந்து கொலை செய்யத்தான் எல்லாரும் காத்திருக்கிறார்கள்.+
ஒவ்வொருவனும் தன் சகோதரனைப் பிடிப்பதற்கு வலை விரிக்கிறான்.
3 கெட்ட காரியங்கள் செய்வதில் அவர்கள் கெட்டிக்காரர்கள்.+
தலைவர்கள் தாங்கள் நினைத்ததைச் சாதிக்க மற்றவர்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.
நீதிபதிகள் லஞ்சம் வாங்குகிறார்கள்.+
அதிகாரிகள் தங்களுடைய விருப்பங்களைச் சொல்கிறார்கள்.+
அவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள்.
4 அவர்களில் நல்லவன்கூட முள்ளைப் போல இருக்கிறான்.
அவர்களில் மிக நேர்மையானவன்கூட முள்வேலியைவிட மோசமாக இருக்கிறான்.
உன் காவல்காரர்கள் அறிவிப்பு செய்த தண்டனைத் தீர்ப்பின் நாள் வரும்.+
அப்போது, அவர்கள் கதிகலங்குவார்கள்.+
உன் மடியில் படுத்திருப்பவளிடம் ஜாக்கிரதையாகப் பேசு.
6 மகன் அப்பாவை அவமதிக்கிறான்.
மகள் அம்மாவை எதிர்க்கிறாள்.+
மருமகள் மாமியாரோடு மோதுகிறாள்.+
ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருக்கிறார்கள்.+
7 ஆனால், நான் யெகோவாவுக்காக எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன்.+
என்னை மீட்கும் கடவுளுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்.+
என் கடவுள் என் வேண்டுதலைக் கேட்பார்.+
8 என்னை எதிர்ப்பவளே! என் நிலையைப் பார்த்து சந்தோஷப்படாதே.
நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்.
நான் இருட்டில் இருந்தாலும் யெகோவா எனக்கு வெளிச்சமாக இருப்பார்.
9 நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்.+
அவர் எனக்காக வழக்காடி நியாயம் வழங்குவார்.
அதுவரை அவருடைய கோபத்தைத் தாங்கிக்கொள்வேன்.
அவர் என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார்.
நான் அவருடைய நீதியைப் பார்ப்பேன்.
இப்போது வெட்கத்தில் தலைகுனிவாள்.
அவளுக்கு வரும் கதியை நான் பார்ப்பேன்.
தெருவில் உள்ள சேற்றைப் போல அவள் மிதிக்கப்படுவாள்.
12 அந்த நாளில் அவர்கள் உங்களிடம் வருவார்கள்.
அசீரியாவிலிருந்தும் எகிப்தின் நகரங்களிலிருந்தும் வருவார்கள்.
எகிப்திலிருந்து யூப்ரடிஸ்* ஆறு வரைக்கும் வருவார்கள்.
ஒரு கடலிலிருந்து இன்னொரு கடலுக்கும் ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கும் வருவார்கள்.+
13 தேசத்தின் குடிமக்கள் குற்றங்கள் செய்தார்கள்.
அதனால் தேசம் பாழாகும்.
14 உங்கள் மந்தையாகிய ஜனங்களை உங்களுடைய கோலால் மேயுங்கள், அவர்கள் உங்களுடைய சொத்து.+
அவர்கள் தன்னந்தனியாகக் காட்டில் குடியிருந்தார்கள், பழமரத் தோப்பின் நடுவில் வாழ்ந்தார்கள்.
பூர்வ காலங்களைப் போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேயட்டும்.+
15 “அவர்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது நான் அதிசயங்களைச் செய்தேன்.
அதுபோலவே இப்போதும் செய்து காட்டுவேன்.+
16 பலம்படைத்த தேசத்தார்கூட அதைப் பார்த்துக் கூனிக்குறுகுவார்கள்.+
தங்கள் கையால் வாயை மூடிக்கொள்வார்கள்.
அவர்களுடைய காதுகள் செவிடாகும்.
17 பாம்பைப் போல அவர்கள் மண்ணை நக்குவார்கள்.+
ஊரும் பிராணிகளைப் போல மிரண்டுபோய் மறைவிடங்களிலிருந்து வெளியே வருவார்கள்.
கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நடுங்கியபடி நிற்பார்கள்.
அவரைப் பார்த்துப் பயப்படுவார்கள்.”+
18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.
உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+
நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.
ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+
19 அவர் மறுபடியும் நமக்கு இரக்கம் காட்டுவார்;+ நம் அக்கிரமங்களை ஒழித்துக்கட்டுவார்.
நம்முடைய எல்லா பாவங்களையும் ஆழ்கடலுக்குள் போட்டுவிடுவார்.+